Header Ads



தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மஹிந்த ராஜபபக்ஷ தவறிவிட்டார் - விமல் வீரவன்ச

தோல்வியைத் தடுத்துக் கொள்ளத் தேவையான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளத் தவறியதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபபக்ஷ தோல்வியுற்றதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்று இன்று அவர் வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே மஹிந்தவின் தோல்வி குறித்து எங்களுக்குத் தெரியும். அதனைத் தடுத்துக் கொள்ள எங்களால் முடிந்த வரை முயற்சி செய்தோம்.

ஒருசிலர் கூறுவதைப் போன்று இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதால் மட்டும் தோல்வி ஏற்படவில்லை. அரசாங்கத்துக்குள் செய்திருக்க வேண்டிய சீர்திருத்தங்களை செய்ய மறுத்தததன் காரணமாகவே தோல்வி ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் சீர்திருத்தங்களைச் செய்யாமலே தேர்தலுக்குச் சென்றிருந்தாலும் இதே தோல்விதான் கிடைத்திருக்கும்.

தேர்தலுக்கு முன்னதாக எங்கள் கட்சி சார்பாக 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதனை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியே வந்திருக்காது. உண்மையில் அது தோல்வியைத் தடுத்துக் கொள்வதற்கான தடுப்பூசியாகும். மஹிந்த ராஜபக்ஷ அதனை ஏற்றிக் கொள்ளத் தவறினார். அதன் காரணமாகவே அவர் தோல்வியுற்றார் என்றும் விமல் வீரவங்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. You are one of main reason for his lost. Bec you maked the plan to promote the extrimism in this country via mahinda against minority.

    ReplyDelete
  2. உங்களின் பனிரண்டு அம்ச கோரிக்கையை மஹிந்த ஏற்றுக்கொண்டிருந்தால் இதவுட மோசமானதொரு தோல்வி ஏற்ப்பட்டு இருக்கும்.முதலில் நீ தடுப்பூசி போட்டுக்கொள் உனது உணர்வற்ற பேச்சின் விளைவே விளைவுதான் மகிந்தவின் தோல்விக்கு காரணம்

    ReplyDelete

Powered by Blogger.