Header Ads



வீதிகளை அமைக்க கடன்பெற்ற மஹிந்த, மாளிகையே அமைத்தார்

வீதிகளை அமைப்பதாகக் கூறி கடன் பெற்றுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் மாளிகை ஒன்றை புனரமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக என உள்நாட்டு வங்கிகளில் பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணம் எம்பிலிப்பிட்டியில் அமைந்துள்ள மாளிகை ஒன்றை புனரமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 18 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டு, மாளிகை புனர் நிர்மானப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

நாட்டின் 28 பாதைகளை அமைப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 151 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் அமைச்சரவையும் இந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

கடந்த ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைகக்கு 28 பில்லியன் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், போலியான அபிவிருத்தித்திட்டங்களை காண்பித்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எம்பிலிபிட்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 18.44 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டது என்பதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாட்டுப் பணிப்பாளா கீத் பேர்னாட் உறுதி செய்துள்ளார்.

1 comment:

  1. இவன பிடித்து உள்ள தள்ளி நொங்கு நொங்குண்டு நொங்கி உள்ள தள்ளாமல் கத பேசிட்டு இருக்கார்கள்.ஒழுங்கான நாடாக இருந்தால் இவன் இப்போது உள்ள மாமியார் வீட்டில் இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.