Header Ads



மஹிந்தவுக்கு சிங்களவர்களிடையே உள்ள, கதாநாயக அந்தஸ்த்தை கட்டுப்படுத்தவே தேர்தல்..!

-Tm-

ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கையில் போர்க்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்படுமிடத்து, அவரின் செல்வாக்கு எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்குமெனவும் அதைத் தடுக்கும் பொருட்டே நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டதாக அரசாங்க உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக 26 வருடங்களாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற வகையில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை சிங்கள மக்களிடையே காணப்படும் கதாநாயகன் அந்தஸ்து தற்போதும் காணப்படுகிறது.

இந்நிலையில். இறுதிக்கட்ட போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகவிருந்த நிலையில். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான தரப்புகளுக்கு அவ்வறிக்கை ஓகஸ்ட் மாத இறுதியிலேயே வெளியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டதையடுத்தே தேர்தல்கள் உடனடியாக அறிவிக்கபட்டுள்ளது.

No comments

Powered by Blogger.