Header Ads



மைத்திரியின் தீர்மானத்தினால் ஏமாற்றமடைந்துள்ளோம் - ஹக்கீம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இத்தகவலை வெளியிட்டார்.

அந்தவகையில், அம்பாறை, திருகோணமலை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில், ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக இதன்போது ரஊப் ஹக்கீம் கூறினார்.

ஆயினும், மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் மு.காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் எனவும் இதன்போது ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படவுள்ள இரு வேட்பாளர் நியமனங்களில் ஒன்றினை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கவுள்ளதாகவும் மு.கா. தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால இடமளித்தது குறித்து, உங்களது அபிப்பிராயம் என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் ஹக்கீடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம்; இது தொடர்பில் தமது கட்சி பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளது என்றார்.

இச்சந்திப்பில் மு.கா. தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர்சேகுதாவூத், ராஜாங்க அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ. ஹஸனலி, உள்ளகப் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாவா பாறூக், எம். அஸ்லம், பைசல் காசிம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் நஜா முகம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

11 comments:

  1. Get ready to jump from UNP to UPFA after the election...........

    ReplyDelete
    Replies
    1. So what??? Keep jumping until you are surviving! This is Sri Lankan gangam style...

      Delete
  2. The current SLMC under Rauf and his group are not working for SL Muslim community we need alternative

    ReplyDelete
  3. It is a funny you join with Mr. Rahuman, BCAS when they are yet to prove their vote bank. Don't say it is not for money. Hence, we don't think you have the right to criticize anyone when you don't have a policy for yourself. Don't cheat the community by the name of coastal district which is unrealistic and unjustifiable in this multi ethnic country. We want to hear more about your contribution to Ampara which made you twice into power and back up pajero...... NOT only the song "Aathawan Elunthu wanthaan".

    ReplyDelete
  4. padavi mogal hakkemukku thalai virithu aadukirathu, namadu palliwasal usadium podu ,mounittu wittu , indu kassukka ga thalai kattuginranar.

    ReplyDelete
  5. ஐயா றகுமான் அவர்களே நீங்கள் ஓர் படித்தவா், நம் சமூகம் சார்ந்த கவலை கொண்டிருக்கும் ஒருவர் ஆனால் உங்கள் அருகில் இருப்பவரோ நம் சமூகத்தை காட்டி சுயநலன்களில் மட்டுமே அக்கறை கொண்டு வலம் வரும் ஓர் பச்சோந்தி எனவே உங்கள் தனித்துவத்தை நீங்கள் இவரிடம் பறிகொடுத்து விடாதீர்கள்

    ReplyDelete
  6. Hakeem; oru suyanalevathiyakawe parke vandum iruthi mudivonru innum kidaikkatha nilai il aver eppadi ithaik koaruwar, naan ninaikkirai Hakeemai vide MS nallever ene.

    ReplyDelete
  7. hasan ali vepalara? allathu thesiya padiyala? LD

    ReplyDelete
  8. அப்துல் றஹுமான் சார், உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்ததையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டீர்களே சார். நீங்களும் ஒரு அழிந்தகேஸ்போல் தான் இப்பொழுது எங்களுக்குத் தென்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.