Header Ads



வசீம் தாஜூடினின் தொலைபேசி, தொடர்பாடல் விபரங்களை வெளியிட முடியாது - டயலொக்

முன்னாள் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் தொலைபேசி தொடர்பாடல்கள் குறித்த விபரங்களை வெளியிட முடியாது என டயலொக் அக்சியாட்ட நிறுவனம் நீதிமன்றில் சத்தியக் கடதாசி ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக விபரங்களை வெளியிடுவதில் சிக்கல் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தொலைபேசி அழைப்பு தொடர்பாடல் விபரங்கள் மூன்று மாத காலங்களுக்கு மட்டுமே பேணிப் பாதுகாக்கப்படும் என அறிவித்துள்ளது.

எதாவது ஓர் வகையில் விசாரணைகளுக்கு ஒத்துழப்பு வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பிரிஸ் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.

வசீம் தாஜுடீன் மரணம் n;தாடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தாஜூடீனின் தொலைபேசி தொடர்பாடல்களை விசாரைணக்கு உட்படுத்த அனுமதியளிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு மே மாதம் வாசீம் தாஜூடீனின் வாகனம், சாலிகா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள வீதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தார்.

மதில் ஒன்றில் மோதுண்ட கார் முற்று முழுதாக வெடித்துச் சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் தாஜூடீனின் பணப்பை வேறும் ஓர் இடத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்த மரணம் ஓர் கொலை என அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசிதவிற்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2 comments:

  1. மகிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரும் சாத்தியமிருப்பதாகக் கருதி மறுக்கின்றாரோ என்னவோ..?

    உண்மைகளை வெளிக்கொணர, வேண்டுமென்றே ஒத்துழைக்காதவர்களும் குற்றமிழைத்தவர்களாகக் கருதித் தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Every Muslim should change their provider! They shoudnt use dialog!

    ReplyDelete

Powered by Blogger.