Header Ads



திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரி விசேடஉரை - ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவா..?


பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும் பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி திங்கட் கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஜனாதிபதி எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தன்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பங்களிப்பு வழங்கிய அமைச்சர்களை அழைத்து அவர்கள் உருவாக்கியுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளார்.

2 comments:

  1. politician markelil oru nalle manitherakeva MSai nan parkiran.wait $ see.public eppothum nadunilaip poakkullewerkelai irukke wandum.

    ReplyDelete
  2. As a leader of the party, My3 has failed in all aspects. As a leader of the country we have to wait and see after 18th August.

    ReplyDelete

Powered by Blogger.