Header Ads



மைத்திரி, ரணில், சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணியா..?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த கூட்டணி அமையும் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதி நிகழ்வு ஒன்றின் போது இது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் ஊழல்கள் இடம்பெறவில்லை என்று நிகழ்வில் உரையாற்றிய மைத்திரிபால தெரிவித்திருந்தார். இதன் மூலம் மஹிந்தவின் ஆட்சியில் ஊழல் இடம்பெற்றதாக மைத்திரி சிலேடையாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் மைத்திரி, சந்திரிகா,ரணில் ஆகியோர் இணைந்து அன்னம் சின்னத்தில் மீண்டும் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.