Header Ads



இலங்கையிலுள்ள 500 பாடசாலைகளில், மலசலகூட வசதிகள் இல்லை

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 500 பாடசாலைகளில் மாணவர்களுக்கான மலசலகூட வசதிகள் இல்லையென கல்வியமைச்சு நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் உபாலி  மாரசிங்ஹ அறிவித்துள்ளார்.

 2000 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலைகளில் ஒரேயொரு மலசலகூடம் உள்ளமையும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இருக்கின்ற கழிப்பறை வசதிகளை முறையாகப் பயன்படுத்துவதில் மாணவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்குவதில் பாடசாலை அதிபர்கள் அக்கறையின்றிக் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

 கழிப்பறை வசதியற்ற பாடசாலைகளுக்கு கழிப்பறை வசதிகளை பெற்றுக் கொடுக்கும் விசேட வேலைத்திட்டமொன்று யுனிசெப் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.