Header Ads



நேபாள மதஸ்தலங்களை புனரமைக்க 345 மில்லியன் வழங்கும் இலங்கை

நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்யவென நிதி உதவி அளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

நேபாளத்தில் அண்மையில் இடம்பெற்ற கோர பூமியதிர்ச்சியினால் பல மதஸ்தலங்கள் சேதமடைந்தன. அவற்றில் முக்கிய இரு மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

குறித்த புனர் நிர்மாண பணிகளை திட்டமிடுவதற்காக வேண்டி தொழில் நுட்ப அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நேபாளம் நோக்கி அனுப்புவதற்கும், குறித்த நிர்மான பணிகளை முன்னெடுப்பதற்கு இலங்கை இராணுவத்திற்கு ஒப்படைப்பதற்கும், குறித்த புனர் நிர்மாண பணிகளுக்காக வேண்டி 345 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாகவும் வழங்க புத்தசாசன அமைச்சிக்கு வழங்குவதற்கும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

2 comments:

  1. முதலிலே இனவாதத்தால் சீறிக்கொண்டிருக்கும் ஞாண மற்ற அறிவிலி சாரரினால் இடிக்கப்பட்ட பள்ளிவாயல்களை கட்டிட பாறுங்க சார்
    எனென்றால் நேபால மக்களும் அறிவார்கள் இலங்கையில் அதிகமான பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்பட்டதனை
    ஒரு வேளை அஸ்வரும் காதரும் மஹிந்தயும் அறியாமலிருக்கலாம்
    முதலிலே சொந்தக் குடிமக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்
    வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நற்பெயர் தானாய் தேடி வரும்

    ReplyDelete
  2. உள்நாட்டில் தேவச்தானங்கலல்லாம் பாலாப்போய் கிடக்குது நேபாளத்தில் புனர் நிர்மாணம் சையப்போரைகள் எதைத்தான் ஊர் பேருக்கு மா இடிக்கிறது என்று சொல்வதோ?

    ReplyDelete

Powered by Blogger.