Header Ads



மகிந்த – மைத்திரி பொற்காலத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதிக்கு பின்னர் காணமுடியும்

மகிந்த –மைத்திரி பொற்காலத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதிக்கு பின்னர் காண முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பெரிய குற்றங்களை செய்தவர்களுக்கு அந்த கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காவிட்டால், நாங்களும் எங்களில் சிறிய தவறுகளை செய்தவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க மாட்டோம் எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

வேட்புமனு கிடைக்காதவர்கள் யார் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காத வீரவன்ஸ, அதனை எதிர்வரும் 13 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அறிந்து கொள்ள முடியும் என்றார்.

தேர்தலில் வெல்ல ஐக்கிய தேசியக் கட்சி பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது எனவும் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பந்துல குணவர்தன, உதய கம்மன்பில, மனுஷ நாணயக்கார, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. உங்கள் பொற்காலம் என்ன என்று நாங்கள் அளுத்கமவிலும் நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கெல்லாம் கன்டோமே - போதாதா இது எங்களுக்கு ??? இன்னும் என்னடா உள்ளது பார்க்க ??

    இனி எத்தனை கிறீஷ்மேன்கள் எப்படி எப்படி எல்லாம் வரப்போறானுவளோ தெரியலியே நாயனே ???????????

    என்ன என்ன அனியாயம் அட்டகாசம் இனி செய்யப் போறானுவளோ தெரியலயே நாயனே ?????

    ReplyDelete

Powered by Blogger.