Header Ads



"மஹிந்தவினால் விலைக்கு வாங்கமுடியாது போன, முஜீபுர் ரஹ்மான் பாராளுமன்றம் செல்ல வேண்டும்"

முன்னாள் அமைச்சர் மொஹமட் மஹ்ரூபை மஹிந்த அரசு ஈர்த்துக்கொண்டபோது முஜிபுர் ரஹ்மானையும் ஈர்த்துக்கொள்ள முயற்சித்தது. எனினும் முஜிபுர் ரஹ்மானின் புத்திசாலித்தனத்தால் அது சாத்தியப்படவில்லை என கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு 12, குணசிங்கபுர மைதானத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரவி கருணாநாயக்கவும் விஷேட அதிதிகளாக நிதி விவகார, கொள்கை திட்டமிடல், சிறுவர் மற்றும் இளைஞர் விவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே கொழும்பு மாநகர சபை மேயர்  இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

எனது வெற்றி பாரியளவில் உழைத்தவர் முஜிபுர் ரஹ்மான்.  அவர் அடுத்த பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும். 

2011 ஆம் ஆண்டளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்ட போது முஜிபுர் ரஹ்மானையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். மஹிந்த அரசுடன் இணைந்து சுகபோகங்களை அவரால் அனுபவித்திருக்க முடியும். எனினும் முஜிபுர் ரஹ்மான் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டு மஹிந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினார். 

அவர் அப்போது மஹிந்த அரசுடன் இணைந்திருந்தால் இன்று அவரால் மத்திய கொழும்பு அமைப்பாளராகியிருக்க முடியாது. 'நான் அரசுக்கு சோரம்போக விரும்பவில்லை. கஷ்டப்பட்டே அரசியலில் முன்னேர விரும்புகிறேன்' என்கிற நிலைப்பாட்டில் இருந்து அவர் ஐக்கிய தேசிய கட்சியை முன்னேற்றுவதில் பாடுபட்டார். 

இப்போது அவரை நாம் மத்திய கொழும்பு அமைப்பாளராக்கியிருக்கிறோம். அவர் கொழும்மை முன்னேற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறார். எமது அபிவிருத்தி பணிகளுக்கும் அவர் உதவி செய்கிறார்.  இந்நிலையில் மத்திய கொழும்புக்கு பாராளுமன்ற பிரதிநிதியொன்றின் தேவைப்பாடு இருக்கின்றது. இந்த இடைவெ ளியை முஜிபுர் ரஹ்மான் நிரப்ப வேண்டும். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் பெ ண்களின் சார்பில் பெரோஸா முஸம்மில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றார்.


No comments

Powered by Blogger.