Header Ads



மைத்திரியையும், ரணிலையும் சந்தித்து எச்சரிக்கை விடுத்த ரவூப் ஹக்கீம்

அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ள 20 ஆவது திருத்தம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளும், சிறிய கட்சிகளும் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளன. நாங்கள் கோரியதன் பிரகாரம் இரட்டைவாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படாவிட்டால் சிறுபான் மையினக் கட்சிகள் மட்டுமல்ல ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளும் பாரதூரமாக பாதிக்கப்படுமென்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன்.

எனினும் அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஜனாதிபதியையும் சந்தித்து, சிறுபான்மை கட்சிகளோடும், சிறிய கட்சிகளோடும் மீண்டும் கதைப்பதற்கான உடன்பாட்டுடன் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அவ்வாறு கலந்தாலோசிக்காமல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்துரைத்தேன். என்ன நடக்கப் போகின்றது எனப் பொறுத்திருந்து பார்ப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்தில் இரட்டை வாக்குச்சீட்டு முறைமை உள்வாங்கப்படாது அமைச்சரவை அங்கீகாரம் அளித்தமை அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எஸ்.பி.திசாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரே இக்கோரிக்கையை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எங்களது நியாயமான கோரிக்கையை கணக்கிலெடுக்காமல் நடப்பது ஜனநாயகத்திற்கு முரணான நடவடிக்கையென்று சிறுபான்மையினங்களுக்கு அநியாயம் நடக்காமல் பார்த்துக் கொள்வோ மென ஜனாதிபதி சொல்வது ஒரு புறமிருக்க, செயலளவில் அது சாத்தியமாவதென்பது கஷ்டமான விடயமாகவுள்ளது.

No comments

Powered by Blogger.