Header Ads



பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு (வீடியோ)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அமைச்சரவைக்காக பிரேரிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

தம்புள்ளை - கலேவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கையை முன்னேறிய நாடாக மாற்றுவதே தமது முக்கிய நோக்கம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். தாம் போட்டிக்கு தயாராக இருப்பதாகவும், சட்டத்தரணிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் ராஜபக்ஷ குழுவை தோற்கடித்த நாங்கள். எதிர்வரும் தேர்தலில் அந்த குழுவை குழிதோண்டி புதைத்து விடுவோம். எனவே, மஹிந்த ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என தெரிந்து கொள்ள வேண்டும்.  அவர் கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அச்சம் என்றால் வீட்டில் இருக்கட்டும். (வீடியோ)

1 comment:

Powered by Blogger.