Header Ads



பாராளுமன்ற தேர்தல் குறித்து, சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள சூடான தகவல்..!

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றை இப்போதைக்கு கலைக்காது 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி புதிய தேர்தல் முறைமையின் ஊடாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நிலவி வரும் சர்ச்சைகள், ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை மற்றும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளமை, ஆகிய காரணிகளினால் தேர்தலை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டால், பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.

அதற்கு முன்னதாக மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு தேசிய அபிவிருத்தி முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.