Header Ads



பௌத்த மதத்தில் எந்தவொரு கறுப்பு பக்கமும் இல்லை, பொதுபல சேனா சார்பாக 3 பேரை பாராளுமன்றம் அனுப்புவோம்

எதிர்வரும் பொது தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 3 வேட்பாளர்கள் அல்லது நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதே அமைப்பின் நோக்கம் என அதன் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தின் கறுப்பு பக்கம் எனும் தொனிபொருளில் ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருக்கும் சிங்கள பௌத்த தலைவர்கள், சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு செவிகொடுக்காத நிலைமை தற்போது காணப்படுகின்றது.

தமிழர்களுக்காக தமிழ் இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் ஒரு சிலர் இருக்கின்றனர்.

ஆனால் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்காக வாதிடுவதற்கு எந்த தலைவர்களும் முன்வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னொரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் ஆயுதங்களை கொண்டு செய்த கெடுதல்கள் தற்போது ஊடகவியலாளர்களை ஆயுதமாக கொண்டு செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த மதத்தில் எந்தவொரு கறுப்பு பக்கமும் இல்லை எனவும் தேரர் குறிப்பிட்டார்.

இன்று நாட்டில் உயர்ந்த அறிவு படைத்தவர்கள் விரைவில் பௌத்த தர்மத்தை தழுவிக்கொள்ளும் சூழ்நிலையில் அதை ஜீரணிக்கமுடியாத தீவிரவாதிகள் பௌத்த தர்மம் வேரூன்றியுள்ள நாடுகள் மீது பல்வேறு வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

3 comments:

Powered by Blogger.