Header Ads



புத்தளம் பாயிஸ் மீது, பலதரப்பட்டவர்களின் கவனம்

-Isham Mark-

சுமார் 26 வருடமாக புத்தளம் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து வந்த வரலாறு முழு இலங்கைவாழ் மக்களும் பேசிமுடித்த விடயமாக இருந்தாலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எப்படியாயினும் ஒரு உறுப்பினரை பெற வேண்டும் என்ற நோக்கோடு பல குழுக்கள் பல வகையான செயட்திட்டங்களோடு அண்மைக்காலமாக செயட்பட்டுவந்தார்கள். இப்படி செயற்பட்ட ஒரு குழுவினர் பல்வேறு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்கள் மற்றும் குழுக்களை சந்தித்து பல பேச்சுவார்த்தைகளை செய்து புத்தளத்தில் பொது அணியில் “பொது வேட்பாளராக” ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளார்கள்.

மிக விரைவில் பாராளுமன்ற தேர்தல் ஒன்றிற்கு நாம் முகங்கோடுக்கவிருக்கும் நிலையில், புத்தளத்தில் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள்முதல் வென்று எடுக்கப்படாத பாராளுமன்ற பிரதிநிதியை இம்முறை வெல்வதற்காக வழமைபோல் பல்வேறு தரப்பில் பல கட்சிகளின் முன்னெடுப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் கட்சிகளுக்கு அப்பால் தனக்கென்று தனியான பாரிய வாக்கு வங்கியை கொண்டிருக்கும் K.A.பாயிஸ் அவர்களின் மீது பலதரப்பட்டவர்களின் கவனமும் செல்கின்றமை ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒவ்வொரு தரப்பினரும் தாம் வெற்றிபெற வேண்டுமெனில் K.A.பாயிஸ் தங்கள் தரப்பில் போட்டியிட வேண்டும் என பல்வேறு முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், மிக நிதானமாக, புத்தளத்திற்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை வென்றெடுக்க சாத்தியப்படும் வழிமுறைகள் பற்றி நன்கு ஆராய்ந்து வந்த K.A.பாயிஸ் அவர்கள், அவ்வாறு சாதகமான, நம்பிக்கையான, காலச் சூழல்களுக்கு பொருத்தமான திட்டங்களோடு வந்த சில அமைப்புக்கள், உலமாக்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சில முன்னெடுப்புக்களை செய்துவந்தார்.

பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் குறித்த அமைப்புக்களுடன் நடந்த தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பலனாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு பொது அணியில் “பொது வேட்பாளராக” KAB களமிறங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த அணியில் முன்னாள் மற்றும் இந்நாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் என பல பிரபலங்கள் சிலரும் இணைந்துள்ளனர். சகல இன, மதத்தவர்களையும், பெண்கள் சார்பான பிரதிநிதி ஒருவரையும் உள்ளடக்கியதாகவும், புத்தளம், கல்பிட்டி, வண்னத்திவில்லு, முந்தல் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் ஏனைய சில பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த பொது குழு தொடர்பான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதுடன் மிக விரைவில் இந்த அணி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாடுகளில் ஈடுபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விகிதாசார தேர்தல் முறையில் இழந்துவரும் புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கும் சவாலான முயற்ச்சியில் தம் கட்சி இலக்குகளை துறந்து களமிறங்க இருக்கும் இந்த அணியினருக்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்க முழு புத்தளம் வாழ் மக்களையும் எந்த பேதமும் இல்லாமல், ஒரே அணியின் கீழ் ஒன்றிணைய அன்பாக அழைப்பு விடுக்கிறோம். அதே நேரம் புத்தளம் இழந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள நீங்கள் இறைவனை பிரார்த்திக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.