Header Ads



ஆட்சியை கையளிக்குமாறு, மைத்திரியிடம் நேரில் கோரப்பட்டது

பெரும்பான்மை பலமுள்ள ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிறுபான்மை பலமுள்ள ஐ.தே.க.வுக்கு ஆட்சியில் இருக்க அருகதை இல்லை.

எனவே, தமது கட்சிக்கு ஆட்சி பொறுப்பை வழங்குமாறு கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் எடுத்த தீர்மானத்தின்படி நேரில் அதனை ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு செய்யப் பட்டதாகவும் ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

அடுத்த தேர்தலில் ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது குறித்தும் ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை மீளப்பெறுவது குறித்தும் ஜனாதிபதியு டனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சு நடத்த கடந்த வாரம் நடந்த ஐ.ம.சு.மு. கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ( 27) இன்றும் இந்த சந்திப்புகள் இடம் பெறுகின்றன.

செப்டம்பர் மாதத்தில் ஐ.தே.க. மீண்டும் எதிர்க்கட்சியாக மாறும் எமது உறுப்பினர்களை சிறையிலடைத்து மக்களின் ஆணையை மாற்ற முடியாது. அடுத்த தேர்தலின் பின்னர் மக்கள் நல அரசாங்கமொன்றை உருவாக்க இருக்கிறோம்.

தமது கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பது தெரிந்தே ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் குறித்து பேசிவருகிறார். கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கப்போவதில்லை.

1 comment:

  1. May Allah Protect us from the evil acts of SATANS. We should keep praying from the one Who is the TRUE CREATOR of this Universe and all what exist in it, not to give power to groups who will made difficulties to our life in the past. Our prayers should not stop but to continue..

    ReplyDelete

Powered by Blogger.