Header Ads



"பொரள்ள மஸ்ஜித் தாக்குதல்" தூங்கிய பேயை முஸ்லிம்கள்தட்டி எழுப்பினார்களா..?

முஸ்லிம்களின் விவேகமற்ற அணுகுமுறை, தூங்கிக் கொண்டிருந்த இனவாதப் பேயை தட்டி எழுப்பி விட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில், அரச ஆதரவுடன் இடம்பெற்று வந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் தணிந்து போயிருந்த நேரத்தில், பொரள்ள பள்ளிவாசல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆட்சி மாறினால், எல்லாம் தாம் நினைத்தபடி ஆகிவிடும், தாம் நாட்டில் நினைத்த மாதிரி கூத்துப் போடலாம் என்கின்ற வாறான மனநிலை முஸ்லிம்கள் மத்தியில் தோன்றி இருந்ததை மறுக்க முடியாது. அதன் வெளிப்பாடாக, மியன்மாரின் தற்போதைய நிலைமைகளை சரியாகக் கூட அணுகாமல், உணர்ச்சிகளுக்கு மட்டும் ஆட்பட்டு கூச்சல் போட்டதன் விளைவு, "கேட்டுத் திண்ட பருப்பு" என்கின்ற கொழும்பின் பேச்சுத் தமிழை ஞாபகமூட்டுகின்றது.

இலங்கையில் ஆட்சி மாறினாலும், இனவாத நடவடிக்கையில் ஈடுபட்ட மனிதர்கள் மாறவில்லை. பெரும்பாலான இளைஞர்கள் இனவாதிகளாக மாறி இருப்பதற்கு, அவர்கள் நியாயமானவை என கருதும் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முஸ்லிம் வியாபாரிகளின் நேர்மையற்ற தன்மை, தமது முழுச் செல்வத்தையும் ஆடம்பரமாக காட்டி பகட்டு வாழ்க்கை வாழும் முஸ்லிம்கள், முகமூடிய கருப்பு அங்கிகள், ஆண்களிடம் புதிதாக தொற்றியுள்ள நீண்ட அரபு நாட்டு ஜுப்பா, முஸ்லிம்கள் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலைமை என்று பல விடயங்கள் உள்ளன.

ஆட்சி மாறினாலும், இவற்றை தினம் தினம் கண்டு, தமது நாடு தமக்கு இல்லாமல் போய்விடுமோ என்று செயற்கையாக பயமூட்டப் பட்டு இருக்கும் சிங்கள பெளத்தர்களின் மனநிலை இலகுவில் மாறிவிடப் போவதில்லை. 

இலங்கையில் எந்த ஒன்றை செய்வதற்கும் ஆட்சியின் ஆதரவு இருக்க வேண்டும் என்கின்ற நிலைமை இல்லை என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. ஆட்சி மாற்றமே, ஆட்சி இல்லாதவர்களால்தான் மேற்கொள்ளப் பட்டது என்கின்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆகவே, இனவாத நடவடிக்கைகள் ஆட்சி இருந்தால் மட்டும்தான் நடக்கும் என்றில்லை.

மியன்மாரில் அண்மைய நாட்களில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையான "பாரிய வன்முறைகள்" எதுவும் இடம்பெற்றிராத நிலையில், இரண்டு முக்கிய முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் கடலில் தத்தளித்த மியன்மார் முஸ்லிம் அகதிகளின் பிரச்சினையை பிழையாக புரிந்துகொண்ட, உணர்ச்சிகளுக்கு மட்டுமே அடிமைப்பட்டதன் விளைவுதான், இன்றைய நிலைக்கான முக்கிய காரணம் ஆகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாரிய வன்முறை தொடர்பான புகைப்படங்கள், திபெத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள், ஆபிரிக்க நாடொன்றில் எண்ணைக்குழாய் வெடிப்பில் கருகிய உடல்கள், சில திரைப்படக் காட்சிகள் என்று எல்லா புகைப்படங்களையும், "இதோ இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை" என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பெளத்த மதத்தையும், துறவிகளையும் இழிவு படுத்தியமை, மோசமான வார்த்தைகளை பொதுக் கலந்துரையாடல்களில் பயன்படுத்தியமை என்று "உசார் மடையர்களாக" செயல்பட்டு, தூங்கி இருந்த இனவாதப் பேயை தட்டி எழுப்பி விட்டுள்ளது முஸ்லிம் சமூகம்.

"இவை அல்லாஹ்வுடைய வசனங்கள் தான் என்று சொல்லப் பட்டாலும், அவர்கள் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு நம்ப மாட்டார்கள்" என்று உண்மையை தேடி அறியும் ஆற்றலுக்கு வரைவிலக்கணம் கொடுத்த மார்க்கத்தில் இருந்துகொண்டு, சமூக ஊடகங்களில் ஊர் பேர் தெரியாமல் பகிரப்பட்ட செய்திகளை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதன் விளைவின் ஒரு சிறு வெளிப்பாட்டையே பொரள்ள சம்பவம் சுட்டிக் காட்டி நிற்கின்றது.

குறைந்த விலையில் இன்டர்நெட் உம், பைரேட்டட் வெர்சன் போட்டோ ஷாப் உம், சமூக ஊடகங்களில் இலவசமாக "Share" ஒப்ஷனும் கிடைக்கின்றது என்பதற்காக, அவற்றை துஸ்பிரயோகம் செய்தால், அல்லாஹ்வின் தண்டனை கூட இனவாதிகள் வடிவில் வரலாம்.

ஏற்கனவே வரலாற்றில் இருந்து படம் கற்றுக்கொள்ள மறந்த முஸ்லிம் சமூகம், இதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அல்லாஹ்தான் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும்.

சுவைர் மீரான்

12 comments:

  1. Mr.suwair meeran you are 100% correct .

    ReplyDelete
  2. Well said.....
    The leaders should guide our uneducated people....

    ReplyDelete
  3. கேட்டு திண்ட பருப்பு தான் முஸ்லிம் நாடுஹலே பர்ர்த்து கொண்டு இருக்கும் பொது இவர்கள் 75% பௌத்தம் உள்ள நாட்டில் கும்மி அடித்தால் யாருக்குதான் பொறுக்க முடியும் இந்தியா வில் வாழும் முஸ்லிம்கள் பேசக்கோட சொதந்திரம்ம இல்லாமல் இருக்குறார்கள் ஒரு முஸ்லிம் அரசியல் வாதிக்கு இடமில்ல அனால் நம் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நினைபோ வேற மாதரி

    ReplyDelete
  4. அரபா நாட்டில் கூடmuslimkal இப்படி எல்லாம் நடந்து கொள்ளவது தில்லை அவர்கலுக்கு பேசகூட இயலாம இருக்கிறார்கள் இலங்கை முஸ்லிம்கள் மட்டும் என்னதான் மனசில் நினைகிரார்களோ தெரிய வில்ல ஒரு மியன்மாரை கண்ட பின்புதான் பாடம் படிப்பார்கள்

    ReplyDelete
  5. MR. Suvair Meeran, please do not try to connect the Borella masjid attack with Burmish problem.. IF YOU CAN NOT FEEL THE PAIN OF BURMISH PEOPLE,,, THAN BE QUITE

    ReplyDelete
  6. ABSOLUTELY right bro.....some of Muslims are foolish by believing on anything ever they read/heard through social medias without trying to know the fact....

    ReplyDelete
  7. FB போராளிகளுக்கு ஓர் நற் செய்தி...
    உங்களின் அயராத முயற்சியின் பயனாக கொழும்பில் பள்ளிவாயல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது

    தொடந்து முயற்சி செய்யுங்கள் ..
    சுடுகாட்டை சீக்கிரத்தில் பார்த்து விடலாம்

    ReplyDelete
  8. முஸ்லிம்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்?
    முஸ்லிம் அல்லாஹ்வினதும் அவனது தூதர்(சல்) ரினதும் வளிமுறையை பின்பற்றுபவன்.
    முஸ்லி (முஸ்லிம்) (முஸ்லிம்)மை அல்லாஹ் பாதுகாப்பான்.
    நாம் முஸ்லிமா?

    ReplyDelete
  9. The wordings you are using is harsh. Women wearing Fardhah, Men wearing long Thoubas, Getting many kids are in Islam. This practice is correct even it may be intimidating to other communities. It is full of shame a Muslim uses these words.

    ReplyDelete
  10. இதைத்தான் நாங்கள் எப்போதோ கூறினோம்.

    அப்போது 'உங்கள் மரபுவழி நடவடிக்கைகளைக் கைவிட்டு மூளையைப்பயன்படுத்துங்கள்' என்று கூறியதற்காக இஸ்லாமிய விரோதிகளாகச் சித்தரித்தவர்கள் இன்று உசார் மடையர்களைப்பற்றி பேசவேண்டிய நிலைமை எப்படி வந்தது?

    எங்கே கிடைக்கும் சிறுசந்து என்று நுழைவதற்குக் காத்திருக்கும் இனவாதிகளுக்கு கார்ப்பட் ரோடு போட்டுக் கொடுத்தால் வேறு என்ன செய்வார்கள்..?

    இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. பெரும்பான்மையின மக்களிலே இனவாதிகளுக்கு ஆதரவு வழங்காத எத்தனையோ நல்ல சக்திகள் உள்ளனர். அவர்களுடன் ஒன்றிணையுங்கள்.

    அதைவிட்டால் வேறு மார்க்கமில்லை!

    ReplyDelete

Powered by Blogger.