Header Ads



மிகநீண்ட வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்குப் பின், தேர்தல் முறை மாற்றத்திற்கு, நேற்­றி­ரவு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்

அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக வர­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான சட்­ட­மூ­லத்­துக்கு நேற்­றி­ரவு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

எனினும் சட்ட மூலத்தில் மேலும் திருத்தங்களை உள்வாங்குவதற்கும் அது தொடர்பில் ஆராய்வதற்கும் அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சில தினங்களுக்குள் தேர்தல் முறை மாற்ற சட்ட மூலத் துக்கு திருத்தங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மிக நீண்டநேர வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்குப் பின்­னரே தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­ர­வையின் இணக்கப் பாடு எட்டப்பட்டுள்ளது. அந்­த­வ­கையில் தேர்தல் முறை மாற்ற வரைபை அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூ­ல­மாக சில தினங்­களில் வர்த்­த­மா­னியில் வெளி­யிட்ட பின்னர் பாரா­ளு­மன்­ற­த்தில் நிறை­வேற்­றவும் விரைவில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்­றைய தினம் அமைச்ச­ரவைக் கூட்டம் நடை­பெற்­றது. இதன்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அமைச்­சரவை உப குழு­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோசனை குறித்து நேற்றும் பல கருத்­துக்களும் யோச­னை­களும் முன்­வைக்­கப்­பட்­ட­துடன் இறு­தி யில் தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­வையின் அங்­கீ­காரம் கிடைத்­த­தாக கூட்­டத்தில் கலந்­து­கொண்ட அமைச்சர் ஒருவர் தெரி­வித்தார்.

" அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நீண்­ட­நேரம் ஆலோ­சிக்­கப்­பட்­டது. மிக நீண்ட நேர வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன. இறு­தியில் தேர்தல் முறை மாற்­றத்­துக்கு அங்­கீ­காரம் கிடைத்­தது "" என்று குறித்த அமைச்சர் குறிப்­பிட்டார்.

கடந்த 20 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போதும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­மையின் கார­ண­மாக நேற்­றைய தினம் வரை அது தொடர்பில் ஆராய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­ப­ட­டது. அதன்­ப­டியே நேற்­றைய தினம் தேர்தல் முறை மாறறம் குறித்து ஆரா­யப்­பட்­ட­துடன் அங்­கீ­கா­ரமும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் முறை மாற்றம் குறித்து ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை உப குழுவில் அமைச்­சர்­க­ளான கலா­நிதி சரத் அமு­னு­கம, எஸ்.பி. திசா­நா­யக்க, லக்ஷ்மன் கிரி­யெல்ல, கபிர் ஹஷீம், சம்­பிக்க ரண­வக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கரு­ணா­தி­லக்க, பழனி திகாம்­பரம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் உறுப்­பி­னர்­க­ளாக இடம்­பெற்­றுள்­ளனர்.

இந்த அமைச்­ச­ரவை உப குழு­வா­னது பல்­வேறு கூட்­டங்­களை நடத்தி இறு­தி­யாக தேர்தல் முறை வரைபை தயா­ரித்து அண்­மையில் ஜனா­தி­ப­திக்கு கைய­ளித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் கடந்த 20 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது இது தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­துடன் தொடர்ந்து யோச­னை­களை பெறு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அமைச்­ச­ரவை உப குழு தயா­ரித்த யோச­னைக்கு சில கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மேலும் சில திருத்­தங்­களை முன்­வைத்­துள்­ளனர். குறிப்­பாக சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களும் சிறு அர­சியல் கட்­சி­களும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தமது யோச­னை­களை முன்­வைத்­தி­ருந்­தன.

புதிய தேர்தல் முறை மாற்­றத்தின் பிர­காரம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 255 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. 196 உறுப்­பி­னர்­களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்­யவும் 59 உறுப்­பி­னர்­களை தேசிய பட்­டியல் ரீதியில் தெரிவு செய்­யவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி தொகுதி மற்றும் விகி­தா­சார முறை­மை­களை கொண்ட கலப்பு தேர்தல் முறையை கொண்­டு­வ­ரு­வது குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. இதன்­படி விருப்பு வாக்­கற்ற தேர்தல் முறையே வர­வுள்­ளது.

அத்­துடன் ஒவ்­வொரு தேர்தல் தொகு­திக்கும் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இடம்­பெறும் வகையில் இந்த தேர்தல் முறை மாற்ற யோசனை வந்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் வாக்­கு­று­தியில் தேர்தல் முறையை மாற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். அதன்­படி தேர்தல் முறையை மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கைளை எடுத்திருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக தேர்தல் முறை மாற்ற விடயத்தில் அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தது. குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதன்படியே இறுதியில் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.