Header Ads



சிங்களவர்களை திருப்திபடுத்த மைத்திரி முயற்சி..? றிசாத்துடன் தனியாக பேச்சு..??

-கஸ்தூரன்- எமது வாழ்விடங்களைத் தாருங்கள், எம்மை எமது சொந்த மண்ணில் குடியேற்றுங்கள் என சொந்தங்கள் பல கூக்குரலிடுகின்றன. உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என வீதிகளில் விழுந்து கிடக்கின்றனர். ஆனால் குடியேறிய மக்களை உரிய இடங்களில் இருந்து வெளியேற்றத் துடிக்கிறது. தனிமனித எழுச்சியில் பொறுமை இழந்து துடிக்கும் பொறாமைச் சமூகம். ஒரு தனிமனிதனை வீழ்த்த நினைக்கும் பாதையில் ஒரு சமூகம், சரிந்து போகக் கூடிய தோற்றப்பாடு வெளிப்படக் கூடாது.

ஆனால் மீண்டும் மீண்டும் எதையாவது ரிசாத் பதியுதீனின் குடியேற்றம் தொடர்பில் பிழை பிடிப்பதிலேயே சிலர் அரசியல் எதிரிகளால் தூண்டப்படுகின்றனர். முட்டையில் மயிர் பிடுங்க முனைவது போன்று சட்டபூர்வத்தில் சட்டவிரோதம் தேடும் சமூகமே இலங்கைச் சமூகம், கஷ்டப்பட்டு வெட்டியதைப் பற்றி நன்றி பாராட்டாத சமூகம் வெட்டிக் கட்டிவராததையிட்டு குறைகூறும். பலகோடி செலவு செய்து கரைசேர்ந்து, திரையைக் கண்ட திரைப்படத்துக்கும் விமர்சனமுண்டு. சில லட்சங்களை மாத்திரம் செலவிட்டு திரைக்கு வந்த திரைப்படத்துக்கும் விமர்சனமுண்டு. விமர்சனங்கள் காரணமாக திரைப்படங்கள் வெற்றி பெறாமல் போய் விடுவதில்லை. ரசிகர்கள் பார்க்காமல் இருந்து விடுவதுமில்லை.

அந்த வகையில், ஒருவரின் உயர்வும், தாழ்வும், இறைவனின் கையில் என்பது போன்று நினைத்துக் கொண்டு, என்னால் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம், பலரால் கூறப்படுவது போன்று, காடழிப்போ, சட்ட விரோதமானவையோ அல்ல எனக் கூறும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சட்டபூர்வம் என்ன சட்டபூர்வ ஆவணங்கள் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

ஜனாதிபதி செயலணியின் பங்காற்றுகை

மன்னார் வில்பத்து மீள்குடியேற்ற விடயங்களில் மீள்குடியேற்றம் அபிவிருத்தி பாதுகாப்புக்கான ஜனாதிபதி செயலணியின் பங்காற்றுகை முக்கியமானதாக அமைந்திருக்கிறது. 2012-07-16ஆம் திகதி ஜனாதிபதி செயலணியின் செயலாளர் ஒப்பமிட்டு, வனபாதுகாப்பாளர் நாயகம், வன பணிப்பாளர் நாயகம், காணி ஆணையாளர் நாயகம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி மாவட்டங்களின் பாதுகாப்பு படைகளின் தளபதிகள் போன்றோருக்கு முஸ்லிம் கிராமங்களில் இருந்து 1990 இல் இடம்பெயர்ந்தோரின் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் பரிந்துரைகளை மேற்கொள்ளும் குழு என்ற தலைப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு - பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், வடமாகாண மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் சுமார் 20 வருடங்கள் இடம்பெயர்வுக்குப் பின்னர் தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ள பெருவாரியான முஸ்லிம் குடும்பங்கள் பல, காணியின்மை காரணமாக மீள்குடியேற்றப்படும் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர் என அறிவிக்கப்பட்டது.

இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் அநேகமானோர், இடம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்து தோன்றியவர்களே, ஆனால் தங்களது பெற்றார்கள் காணிகளை சொந்தமாக்கிக் கொண்டதால் காணிகளின்றி காணப்படுகின்றனர். பெற்றார் வழி காணிகளின் விஸ்தீரணம், பெருகிவரும் குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதியளிப்பது போதாமையாகவுள்ளது. அத்துடன் காணிகள் சிலவற்றை தற்சமயம் வேறு சிலர் பிடித்துள்ளனர். யுத்த காலத்தில் கைவிடப்பட்ட காணிகளில் இவர்களே குடியேற்றப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தின் மடு, மன்னார் நகர், மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகள், வவுனியா மாவட்டத்தின் வவுனியா, செட்டிக்குளம், பிரதேச செயலாளர் பிரிவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, ஒட்டு சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகள், யாழ் மாவட்டத்தின் யாழ், நகர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுகள், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் காணப்படுகின்ற 75 கிராம சேவகர் பிரிவுகளில் காணப்படுகின்ற 85 கிராமங்களில் சமகாலத்தில் வதியும் குடும்பங்கள் 15189, மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 22586.

கணிசமான அளவு குடும்பங்கள் நிரந்தர வதிவிடங்களை எடுத்துக்கொள்ளாமைக்கு பிரதான காரணங்களில் ஒன்று காணியில்லாமை என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமையில், காடுகள் துப்பரவாக்கப்பட்டு காணியற்ற குடும்பங்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கவென முசலி, மாந்தை மேற்கு, மடு, வவுனியா, செட்டிக்குளம், கரைதுறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் போதுமானளவு விஸ்தீரணம் கொண்ட காணிகளை விடுவிக்குமாறு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய காணிகளை விடுவித்தல் சம்பந்தமாக காணியற்ற பிரச்சினை சம்பந்தமாக ஆய்வு செய்யவும், பரிந்துரைகளை மேற்கொள்ளவும் என அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரை தலைவராகக் கொண்ட குழுவில், வனவள பாதுகாப்பு அதிபதி, வனவளற பணிப்பாளர் நாயகம், காணி ஆணையாளர் நாயகம், ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதி, கைத்தொழில் அமைச்சரின் பிரதிநிதி, தங்களது மாவட்டங்கள் தொடர்பான கூட்டங்களுக்கு மாத்திரம் என்ற வகையில் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்டங்களின் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதிகளின் பிரதிநிதிகள், தத்தமது பிரிவுகளின் கூட்டங்களுக்காக மாத்திரம் என்றடிப்படையில் 13 பிரிவகளினதும் பிரதேச செயலாளர்கள் போன்றோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

பணிகளும் செயற்பாட்டுக் கூறுகளும்

காணியற்ற பிரச்சினையின் முக்கியத்துவத்தையும், தேவைப்பாட்டையும் அடையாளங்காணுதல், குறித்த அமைவிடங்களிலிருந்து (கிராம சேவகர் பிரிவுகள்) இடம்பெயர்ந்த குடும்பங்கள், ஆட்களின் எண்ணிக்கை பற்றிய கணிப்பீடு, 2009க்கு முன்பும் அதற்கு பின்பும் தங்களது கிராமங்களுக்கு திரும்பிய நபர்கள் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பு, இன்னும் திரும்ப வேண்டியுள்ள குடும்பங்கள் ஆட்களின் எண்ணிக்கை தொடர்பான கணிப்பீடு, ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள காணிகளின் விஷ்தீரணத்தை அடையாளம் காணுதல், மீளத்திரும்பி வந்தும் காணியற்றிருக்கும் கும்பங்களின் எண்ணிக்கையை பட்டியலிடல் போன்றவற்றை உள்ளடக்கியது.

* காணியில்லாமல் போனமைக்கான காரணங்களை அடையாளங்காணுதல் ஒவ்வொரு வகைகளின் கீழான குடும்பங்களின் எண்ணிக்கை. * காட்டுக்கு வெளியே அல்லது அமைவிடங்களில் காணப்படுகின்ற காணிகளின் கிடைக்கத்தகு தன்மையை மதிப்பிடல் - அத்தகைய காணியில் இடமளிக்கக் கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை. * குடும்பங்களின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் விடுவிக்கப்படத் தேவையான காணியின் பரப்பை கணிப்பிடல். * விடுவிப்பதற்கென அடையாளங் காணப்பட்ட காணிகளின் தற்போதைய அந்தஸ்து மற்றும் இயல்பு பற்றி அறிக்கையிடல். * கிராமங்களில் காணியில்லாப் பிரச்சினைகளை குறைப்பதற்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைத்தல்.

பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், வேலைப்பழுவினை கருத்திற்கொண்டு மன்னார் மாவட்டத்துக்கான அறிக் கையை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாகவும், ஏனைய மாவட்டங்களுக்கான அறிக்கையை மற்றுமொரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது. இக்கடிதத்தின் ஊடாக நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரிய வருகிறது. இதுவே சட்டபூர்வமான மீள்குடியேற்றத்துக்கான பூர்வாங்க ஆவணப் பரிமாற்றங்களாக இருந்திக்க வேண்டும்.

ஜனாதிபதியின் கருத்து

ஒரு கட்டத்தில் வில்பத்து மீள்குடியேற்றம் உரிய முறையாகவே இடம்பெற்றுள்ளது என சிலாகித்த ஜனாதிபதி முன்னாள் அமைச்சரும், சமகாலத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவருமான பஸில் ராஜபக்ஷவை இன்னுமொரு தருணத்தில் சாடினார், சமீபத்தில் கருத்துக் கூறிய ஜனாதிபதி வில்பத்து, மன்னார், மீள்குடியேற்றங்களை சரியானவை என நியாயப்படுத்த முடியாது என தெரிவித்ததாக செய்திகள் கூறின. பொதுவாக சிங்கள, தமிழ், முஸ்லிம் குடியேற்றங்களை குறிப்பிட்டதாக கருத முடியும் என்றாலும் கடந்த அரசாங்கத்தை குறை கண்டிருப்பதை உணர முடிகிறது. உண்மையில், கடந்த அரசாங்கம் மீள்குடியேற்றம், மன்னார், வில்பத்து என வருகின்ற தருணத்தில், அது ரிசாத் பதியுதீனையே சாரலாம். ஏனெனில் அந்தத் தலைப்புக்குரியவராக இருந்தவர் என்ற வகையில் அவர் மீதான ஜனாதிபதியின் மறைமுக சாடலோ என்றெண்ணுவதற்கு பலருக்கு தோன்றலாம். இதேவேளை சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீனை ஜனாதிபதி அழைத்து, நிலைவரங்களை கேட்டறிந்து திருப்தி கண்டதாகவும் ஒரு செய்தி தெரிவிக்கிறது.

என்றாலும் மன்னார், வில்பத்து குடியேற்றங்கள் தொடர்பில் நியாயம் காண முடியாது என பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்துவதற்காக பொதுவான அடிப்படையில், ஜனாதிபதி கூறியிருப்பராகிலும், குறித்த சர்ச்சை தொடர்பில் கும்மியும், கும்மாளமுமடிக்கும் ஊடகங்கள் மற்றும் இனவாதிகளுக்கு இலேசாக கிடைத்த வாசியான செய்தியாகும். இதேவேளை வில்பத்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் அண்மையில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று காரசாரமான முறையில் சகோதர மொழியூடாக விளக்கமளித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. எப்படியும் ஜனாதிபதியின் கருத்தை மையமாக வைத்துக்கொண்டு மறுபடியும் திசைதிருப்பல் நடவடிக்கைகளில் விஷமிகள் ஈடுபடாதிருக்கட்டும்.

யானைகள் கொலை - ஞானசார தேரர்

இத்தகைய நிலையில் இதுவரையில் 20 யானைகளை றிஷாத் பதியுத்தீனின் மீள்குடியேற்றியவர்கள் கொன்று குவித்துள்ளதாக ஆதாரமற்ற செய்திகள் வெளியாகின. திட்டமிட்ட அடிப்படையில் பெரும்பான்மை சிங்கள மக்களைத் தூண்டி அமைச்சருக்கு எதிராக கிளர்ந்தெழப் பண்ணும் ஒரு மறைமுக நடவடிக்கையாகும். இதனை அமைச்சர் வன்மையாக கண்டித்துள்ளார். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடிமக்களும் சந்ததியினருமே அப்பிரதேசத்தில் இருப்பதாகவும், வனாந்தரத்துக்கு சமீப வாழ்ந்து பழக்கப்பட்டவர்களே. அங்கு வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குடியேற்றவாசிகளே யானைகளை கொன்றிருப்பார்களாயின் இத்தனை காலமும் ஏன் இந்த மெளனம், குறிப்பாக தேர்தல்கள் எதிர்வருகின்ற தருணத்தில் மீண்டும், குறிபார்த்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மர்மம் என்ன? எவ்வாறாயினும் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றவர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராவதாக அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

முன்னராக கடந்த காலங்களில் அமைச்சரை சாடிவந்த பொதுபல சேனா ஞானசார தேரர் மீண்டும் றிசாத் பதியுதீனை சீண்டுகிறார். வில்பத்து காடழிப்பதாக கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கு சமீப காலமாக திறம்பட்ட பதில்களையும், பதிலடிகளையும் பல தரப்பினராலும் வெளியிடப்பட்டு வருகின்ற தருணத்தில் புதிதாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகிறார். றிசாத் பதியுதீனை சீண்டிப் பார்க்காவிடில் அவருக்கு உண்ணும் உணவு இறங்குவதில்லை.

2 comments:

  1. please change this font and publish this article...worse font and couldnt read any one with patience.

    ReplyDelete

Powered by Blogger.