Header Ads



ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து சட்ட ரீதியானது அல்ல - நிமல் சிறிபால சில்வா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து சட்ட ரீதியானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.  

பிரதமரின் இந்தக் கூற்று தவறானது எனத் தெரிவித்துள்ள நிமல் சிறிபால டி சில்வா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்;   

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரின் நடவடிக்கைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் கோத்தாபய தாக்கல் செய்தல் மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்ட ரீதியானது.  இந்தத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க போன்ற பிரபல அரசியல்வாதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமெனவும் கூறியுள்ளார்.  

கோத்தாபய தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அவரைக் கைசெய்யத் தடை விதித்து வழங்கிய தீர்ப்பு சரியானது அல்ல என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக முன்னர் செய்திகள் வெளியாகிமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.