Header Ads



அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தி சாதனை

(எம்.ஏ.றமீஸ்)

இம்முறை நடைபெற்ற அக்கரைப்பற்று வலய மட்ட குழு நிலைப் போட்டி நிகழ்ச்சிகளில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதிகமானோர் மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளனர் என கல்லூரியின் அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார்.

நடைபெற்ற 15,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட அணிகள் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று வலய மட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் இப்பாடசலை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 15 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கரம் போட்டியில் இப்பாடசாலை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான செஸ் போட்டியிலும் வெற்றி வெற்று சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட அட்டாhளைச்சேனைக் கோட்ட மட்ட விளையாட்டு விழாவின்போது உதைபந்து, கபடி, கரம், செஸ், கரப்பந்தாட்டம் ஆகிய பெரு விளையாட்டுக்களில் அனைத்து வயதிற்குட்ட ஆண்கள் அணியினர் கோட்ட மட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் இப்பாடசாலை மாணவர்கள்கள் பலர் நடைபெற்ற கோட்ட மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறான சாதனைகளையும் படைத்துள்ளனர்.

இப்பாடசாலையின் விளையாட்டுத் துறையின் விருத்திக்கென செயற்பட்டு வரும் பாடசாலையின் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எல்.அப்துல் பத்தாஹ் மற்றும் ஏனைய பிரதி அதிபர்கள், விளையாட்டுத் துறை ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அஸ்மி, எம்.ஏ.ஜீ.பிர்னாஸ், எம்.ஐ.சிமாலைன், ஏ.எம்.அப்றஜ் றிலா, கே.றிஜ்ஹானா ஆகியோரைப் பாராட்டுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் ஏ.எல்.அன்வர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.