Header Ads



ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரை தூக்கிலிடப்பட்டதை அடுத்து, நிலவும் பதற்றமான சூழ்நிலை

போர்குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக முக்கிய ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரை தூக்கிலிடப்பட்டதை அடுத்து நிலவும் பதற்றமான சூழ்நிலையால் வங்காள தேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களை ஒடுக்கிவந்த பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்காக 1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் உச்சக்கட்ட உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்தப் போரின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். வங்காளதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் முகமது கமாருஸமான் மீதும் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கில் முகமது கமாருஸமானுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் நேற்று(சனிக்கிழமை) இரவு 10.01 மணியளவில் முகமது கமாருஸமான் தூக்கிலிடப்பட்டார். அந்த நாட்டின் முக்கியமான எதிர் கட்சியின் தலைவர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஏதேனும் வன்முறை அல்லது கலவரங்கள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இதை திட்டமிட்ட கொடூர கொலை என்று தெரிவித்துள்ளது. மேலும் நேற்றைய  தினத்தை ”பிரார்த்தனை நாள்" என்று அறிவித்து இருந்தது. இன்று நாடுமுழுவதும் வேலைநிறுத்ததுக்கு அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்கு பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.