Header Ads



இன்னும் சில மணித்தியாலங்களில், மயூரன் சுகுமாரனின் மரண தண்டனை - உறவினர்கள் இன்று சந்தித்து பேசினர்

பாலி 9 கடத்தல்காரர்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று அவுஸ்திரேலியர்கள் உட்பட 9 பேரின்  மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணிநேர கெடு விதிக்கப்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை பற்றிய தகவல்கள் அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்று சான் உட்பட மரண தண்டனை நிறைவேற்றப்படும் நபர்கள் மரண தீவு எனும் இடத்துக்கு கொண்டு செல்லப்படுவர்.

அங்கு குற்றவாளியை சுற்றிலும் நிற்கும் 12 பேர் தமது துப்பாக்கியால் மரண தண்டனை கைதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வார்கள்.

எனினும், அந்த 12 துப்பாக்கிகளில் 3 துப்பாக்கிகளில் மாத்திரம் குண்டு காணப்படும். ஆனால் எந்தெந்த துப்பாக்கியில் குண்டு உள்ளது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.

இந்த மூன்று குண்டுகளில் உயிரிழக்காவிட்டால் மேலதிகமாக குண்டு ஒன்று குற்றவாளியின் தலையை துளைக்கும்.

மரண தீவு - பாலி 9 விவகாரம்; கருணை மனுக்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி 

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள, அவுஸ்ரேலியாவின பாலி 9  என்று அழைக்கப்படும் போதைபொருள் கடத்தல் குழுவை சேர்ந்த இருவரின் கருணை மனுக்கள் மீதான வழக்கை, கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை இந்தோனேசிய நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

அவுஸ்ரேலியாவின் போதைப்பொருள் கடத்தல்கார்களில் முக்கியஸ்தர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்று சான் ஆகியோருக்கு இந்தோனேஷிய நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, இவர்கள் இருவரும் தமது மரண தண்டனையை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு மனுவொன்றை சமர்பித்திருந்தனர். 

இந்நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ, குறித்த மனுக்களை நிராகரித்தார். 

இதனைடுத்து, ஜனாதிபதியால் நிராகரிக்கபட்ட கருணைமனுக்களுக்கு எதிராக, குற்றவாளிகளால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி மாதம் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேருக்கு இந்தோனேஷிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. 

எனினும், இரண்டு அவுஸ்திரேலியர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அவுஸ்திரேலியாவிலிருந்து போதைபொருள் கடத்த முற்பட்ட போது, 2005 ஆம் ஆண்டு, ஷான் மற்றும் சுகுமாரன்  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதனையடுத்து, நடைபெற்ற வழக்கில், குறித்த கடத்தல் சம்பவதுடன் 9  பேருக்கு தொடர்புடையதாக கூறிய இந்தோனேஷிய நீதிமன்றம், இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து, 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

அதனையடுத்து, அவர்களின் குடும்பத்தினர் இந்தோனேஷிய ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்பித்த போதும், ஜனாதிபதி அதனை நிராகரித்துவிட்டார். 

அதற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, போதை பொருள் குற்றவாளிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துவிட்ட நிலையில் அவரது முடிவுக்கு எதிராக எவரும் சவால் விட முடியாது என கூறியதுடன் வழக்கை தள்ளுபடி செய்திருந்தார்.

அவுஸ்திரேலிய பிரஜைகளான இவர்களது மரணதண்டனையை இரத்து செய்ய கோரி அவுஸ்ரேலிய அரசாங்கம், இராஜதந்திர ரீதியாக பல்வேறு அழுத்தங்களை இந்தோனேஷியா மீது பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றும் அறிக்கை நேற்று சனிக்கிழமை(25) வெளியிடப்பட்டுள்ளதுடன் இவர்களது மரணதண்டனை நாளை திங்கட்கிழமை (27) நிறைவடைவதற்குள் நிறைவேற்றப்படும் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மயூரன் மற்றும் சான் ஆகியோர் தங்கள் குடும்பத்தினரை இன்று சந்தித்து பேசினர்.

7 comments:

  1. மன்னிப்பு கொடுத்திருக்கலாம்.... திருந்தி வாழ்வதற்கு...!!

    ReplyDelete
  2. தப்பு செய்தவன் வருந்தியாகனும்

    ReplyDelete
  3. Amnesty for these criminals just because they r Australian?
    First ask Tony Abbott PM to accommadate refugees from Naura island then we can consider amnesty .
    Australiya is much concerned about its criminals than asylum seekers languishing in Nauru island without basic needs.

    ReplyDelete
  4. Appade anraal ulahaththil yarum mingiee irukka mattargal

    ReplyDelete
  5. எவ்வளவு குடும்பங்கள் பாதிக்கபட்டிருக்கும். போதை பொருள் கடத்தல், வியாபாரம் என்பன சமூதாயத்துக்கு செய்யும் பாவம். இவ்வாறானர்களுக்கு உறிய தண்டணை இதுவே.

    ReplyDelete
  6. for drug business show no mercy because it kills not only the drug user but damages the whole family and society.

    ReplyDelete
  7. Kuttam seium ellorukkum mannippuvalangapaddal thodernthu Kuttam seithukondeurupparhal thandikkapaddal mattaverhal parthu thirunthuvarhal

    ReplyDelete

Powered by Blogger.