Header Ads



ஜனாதிபதி மைத்திரிபால, ஓர் சூழ்ச்சிக்காரர் -- அனுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் சூழ்ச்சிக்காரர் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 1970, 1977 மற்றும் 1994ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விடவும் 2015ம் ஆண்டு தேர்தல் மாறுப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல்களில் வறுமை பற்றியே பேசப்பட்டது எனவும், 2015ம் ஆண்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே தேர்தல் நடைபெற்றது எனவம் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால தேர்தல்களைப் போன்று இந்த முறை நடைபெற்ற தேர்தல் எதிராளிககு சவால் விடுக்கும் வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமை மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஓர் வலுவான அரசியல் ஆளுமை படைத்த நபராக கருதப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைமை பற்றி எப்போதும் பேசாத எதிர்க்கட்சித்தலைவர் நிமால் சிறிபால டி சில்வா திடீரென தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்து ஏன் கருத்து வெளியிடவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.