Header Ads



இர்ஷாத் றஹ்மத்துல்லாவுக்கு 'சாம ஸ்ரீ' பட்டம்

புத்தளத்தை சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாம ஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். சமய, சமூக, கலை, கலாச்சார, பொது விடயங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒன்றியம் கௌரவமளிக்கவுள்ளவர்களில் இவரும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இர்ஷாத் றஹ்மத்துல்லா 1970 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 2 ஆம் திகதி புத்தளத்தில் பிறந்தார். தமது ஆரம்ப கல்வியினை புத்தளம் சாஹிரா கல்லுாரியிலும், உயர் தரப் படிப்பினை சாஹிரா தேசிய பாடசாலையிலும் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் ஊடகத் துறை டிப்ளோமா கற்கை நெறியினை பயின்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகம்-போரூட் நிறுவனம் என்பன இணைந்து நடத்திய மனித உரிமை டிப்ளோமா பாடநெறியினையும் பூர்த்திசெய்துள்ளார்.

சிரேஷ் ஊடகவியலாளரான இர்ஷாத் றஹ்மத்துல்லா தமது எழுத்துரையினை பார்வை பத்திரிகை மூலம் ஆரம்பித்தார். அதன் பிறகு நவமணி,தினகரன் பத்திரிகைகளின் செய்தியாளராகவும்  பணியாற்றியுள்ளார். அதன் பிற்பாடு தினக்குரல் பத்திரிகையின் புத்தளம் செய்தியாளராக பணிபுரிந்து வரும் இவர்,சூரியன் எப்.எம்.வானொலியின் விசேட செய்தியாளராகவும் தற்போதும் பணியாற்றிவருகின்றார்.

குறிப்பாக  சமகாலத்தில் ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மொழிகளை தமிழ் மொழியில் உரைபெயர்ப்பு செய்யும் திறமை கொண்டவராக இருக்கும் இர்ஷாத் றஹ்மத்துல்லா,முன்னால் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச உள்ளிட்ட இலங்கை அரசியல் பிரமுகர்கள்,மற்றும் பாகிஸ்தான்,இந்திய துாதுவர்களின் உரைகளையும் மொழி பெயர்ப்பு செய்துள்ளதுடன்,இவர் சிறந்த மேடை மற்றும் வானொலி அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 13 வருட காலமாக தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களின் பாராளுமன்ற செயலாளராக, ஊடக செயலாளராக பணியாற்றியுள்ளதுடன், தற்போது இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றிவருகின்றார். புத்தளம் மாவட்ட சமாதான நீதவானாக சேவையாற்றும் இர்ஷாத் றஹ்மத்துல்லா, ஓய்வு பெற்ற ஆசிரியரும்,முன்னாள் ஜனாதிபதியினால் சிரேஷ்ட பிரஜை கௌரவம் வழங்கப்பட்டவருமான நெய்னா லெப்பை மரைக்கார் செய்யது ரஹ்மத்துல்லா மரைக்கார், மர்ஹூமா உம்மு சுலைஹாவின் புதல்வருாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

Powered by Blogger.