Header Ads



நூலகங்களில் இருந்து புத்தகம் எடுத்துவிட்டு, திருப்பிக் கொடுக்காதவர்களின் கவனத்திற்கு..!

நூலகங்களில் இருந்து படிப்பதற்காக புத்தகம் எடுத்து செல்பவர்கள், குறிப்பிட்ட சில தினங்களுக்குள் அவற்றை நூலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆனால் பள்ளி நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுத்தவர், 65 ஆண்டுகளுக்குப்பின் அந்த புத்தகத்தை ஒப்படைத்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. 

இங்கிலாந்தின் சோமர்செட் அருகே வசித்து வருபவர் சர் ஜேம்ஸ் திட்மார்ஷ். தற்போது 82 வயதான இவர், சமீபத்தில் தனது வீட்டில் இருந்த அலமாரிகளை சுத்தப்படுத்தினார். அப்போது சாமர்செட்மாம் என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய ‘அஷன்டன்’ என்ற புத்தகம் அலமாரியில் இருந்ததை கண்டுபிடித்தார். 

அந்த புத்தகம் தனது அலமாரியில் எப்படி வந்தது? என்று யோசித்த அவருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அந்த புத்தகத்தை திறந்து பார்த்தார். அப்போது, அவர் சிறுவயதில் படித்த பள்ளியின் ரப்பர் ஸ்டாம்பு இருந்தது. 

கடந்த 1949-ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த போது, அங்குள்ள நூலகத்தில் இருந்து இந்த புத்தகத்தை எடுத்ததும், அதை படித்து விட்டு அலமாரியில் மறந்து வைத்து விட்டதும், ஜேம்சுக்கு நினைவுக்கு வந்தது. உடனே முதல் வேலையாக அந்த புத்தகத்தை, 1500 பவுண்டு (சுமார் ரூ.1½ லட்சம்) அபராதத்துடன் நூலகத்தில் ஒப்படைத்தார். அவரின் நேர்மையை நூலக அதிகாரிகளும் பாராட்டினர்.

1 comment:

  1. நம்மவர்களாக இருந்தால் அந்தப் பழைய புத்தகத்தை வைத்தே ஏலம்விட்டு காசுபார்த்திருப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.