Header Ads



லண்டன் சென்ற இந்திய விமானத்தை கடத்த சதியா..? அப்படி எதுவும் நடக்கவில்லையாம்..!

ஏர் இந்தியா விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் சதி செய்ததாகவும், விமான பணிப்பெண்கள் சாதுர்யத்தினால் இது தப்பியது என்றும் பைலட் ஒருவர் ஆங்கில நாளேட்டுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார். 

இந்த 10 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் இப்போது தான் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது போன்று எதுவும் நடக்கவில்லை என்றும் , இது தவறான தகவல் என்றும், இந்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் சோமசுந்தரம் மறுத்துள்ளார். 

இந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: 

கடந்த 17ம் தேதி லண்டனில் இருந்து டில்லி நோக்கி வந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை சிறிது நேரத்தில், பயணி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறினார். உடனே விமானத்தில் இருந்த 5 பேர் தாங்கள் மருத்துவர்கள் என்று கூறி பயணியை பரிசோதித்தனர். பிறகு, இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், உடனடியாக விமானிகளிடம் இது பற்றி கூற வேண்டும் என்றும் அவர்களை அழைக்குமாறும் கூறினர். 

இதற்கு விமானப் பணிப்பெண்கள் மறுத்து விட்டனர். பயணியை உடனடியாக பைலட் அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். சந்தேகம் அடைந்த பணிப்பெண்கள், அவர்களை பைலட் அறைக்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டு விமான நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 

விமான நிலையம் வந்து சேர்ந்ததும், உடல் நலம் பாதிக்கப்பட்டதை போல இருந்த பயணி சாதாரணமாக நடந்து சென்றது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. அந்த 5 பேர் குறித்து விசாரித்ததில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பதும், அவர்கள் கொடுத்த தொலைபேசி எண்கள் அனைத்துமே பொய்யானவை என்பதும் தெரிய வந்தது.

இதனால், இந்திய விமானத்தைக் கடத்த நடந்த சதிச்செயலா இது என்று பெரும் சந்தேகம் எழுந்தது. இது குறித்து முழு அளவில் விசாரிக்கப்படும் என்றும் இது போன்று அப்படி எதுவும் எங்களுக்கு ரிப்போர்ட் ஆகவில்லை, இதில் எதுவும் உண்மையில்லைஎன்றும் விமான போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.