Header Ads



சந்திரிகா தலைமையில், தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம்

நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்தால்தான் அரசாங்கத்தை உறுதியுடன் கொண்டு செல்ல முடியும். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இந்த தலைமையகத்தின் முக்கிய பணி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். பிரதமரின் பிரதிநிதி ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவரும் மற்றும் சில துறைசார் அனுபவம் பெற்ற அதிகாரிகளும் இந்தத் தலைமையகத்தின் கீழ் செயற்படுவார்கள்.

திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் செயற்படவுள்ள இந்தத் தலைமையகத்தின் முழுமையான செயற்பாடு நாட்டின் நல்லிணக்கத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும். இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் ஒன்றுபட வேண்டும். வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இனம், மதம் பாலியல் வேறுபாடுகள் உட்பட சகல வேறுபாடுகளும் களையப்பட்டு நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எமது மக்கள், எமது கலாசாரம் இவை இரண்டையும் கருத்தில் கொண்டே நமது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார். இந்த நாட்டு மக்கள் வேறுபட்டு நிற்காது ஒன்றுபட வேண்டும் என்பது எமது இலக்கு. அந்த இலக்கை நல்லாட்சி அரசு அடையும் எனவும் பிரதமர் கூறினார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட சார்டட் வங்கியின் கட்டிடத்திலேயே இந்த செயலணியின் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தேசிய அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு, ஆளுக்கு ஆள், மாறி மாறி சொறிந்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

    சந்திரிக்காவை நிர்வாணமாக வீதியில் ஓட வைப்போம் என்று பேசிய எஸ்.பீ.திசநாயக்க அமைச்சராக உள்ள நிலையில், நாட்டைப் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கின்றது?

    ReplyDelete
  2. மிகவும் நல்ல தேவையான விடயம். இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் இதய சுத்தியுடன் கட்சி, மொழி, மத, இன, பிரதேச வேறுபாடுகளை களைந்து இந்த அமைப்பின் நோக்கம் வெற்றி பெற தங்களால் முடிந்த ஒத்துளைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.