Header Ads



யாழ்ப்பாணம் முஹம்மதியா பள்ளிவாசலில் ரணில் விக்கிரமசிங்க (படங்கள்)


(பாறுக் சிகான்)

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (27) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மாலை 6.30 மணியளவில் யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்.

இதன் போது பள்ளிவாசல் நிர்வாகத் தலைவரும், ஐ. தே. கட்சியின் யாழ் மாவட்ட சிரேஸ்ட முக்கியஸ்தருமான எம்.சி.எம் முபீன் வரவேற்றதுடன் பிரதமரிடம் யாழ் முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக எடுத்துக்கூறினார்.

அவ்வேளை மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனை அழைத்து யாழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினை தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறும் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் இதற்கு உதவியளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அடுத்து யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன அங்கத்தவர்களினால் பிரதமருக்கு மகஜர் ஒன்றும் அங்கு கையளிக்கப்பட்டது.

 அம்மகஜரில் யாழ் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும்  முக்கியமான சில கோரிக்கைகளை உள்ளடக்கப்பட்டிருந்தன. அத்துடன் அப்பகுதிக்கு திடிரென வந்திருந்த சுகாதார இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான  ஹசன் அலியும் பிரதமர் மற்றும் அமைச்ர் சுவாமி நாதனிடம் யாழ் முஜ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக விசேட கவனம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பில் பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றார்.


No comments

Powered by Blogger.