Header Ads



நாங்கள் கோத்தபாயவிற்கு பயமில்லை - நீதி அமைச்சர் விஜயதாச

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பிரதானிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முறைபாடுகள் தொடர்பா விசாரணைகள் கால தாமதமாவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதுள்ள பயத்தினால் அல்ல என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாங்கள் கோத்தபாயவிற்கு பயமில்லை. ஆனால் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிற்கும் உயிர் எச்சரிக்கைகள் இருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்காக அரசியல் கொள்கை மாறி விட்டதென நினைத்து அவரது ஒரு பாதுகாப்பை நீக்கும் பட்சத்தில் திடீரென அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அதன் பாரதூரமான விளைவுகளினால் அரசாங்கத்திற்கும் மட்டுமின்றி நாட்டிற்கும் கேடுவிளையும்.

அவர்களது அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் இருப்பது பழைய அதிகாரிகளின் ஆட்சியில்.

இதனால் சில விசாரணைகளின் தாமதம் தொடர்பாக மக்கள் மனநிலையினை எங்களால் புரிந்துகொள்ள முடியும் எனினும் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கப்படும் எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.