Header Ads



ஆப்கானிஸ்தான் பெண் அல்குர்ஆனை எரித்ததாக கூறியது சுத்தப்பொய்

ஆப்கானிஸ்தானில் குர்ஆனை கொளுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கும்பல் ஒன்றால் மோசமாக தாக்கி கொல்லப்பட்ட பெண் மூட நம்பிக்கை நடைமுறைகளை எதிர்த்ததாலேயே இந்த நிலைக்கு ஆளாகி இருப்பதாக சாட் சியங்கள் குறிப்பிட்டுள்ளன.

காபுல் நகரில் கடந்த வாரம் கும்பல் ஒன்றால் கொல்லப்பட்ட பார்குண்டா என்ற அந்த பெண், முல்லா ஒருவருடன் புனித சன்னதி (சியாரம்) ஒன்றில் பெண் களுக்கு தாயத்துகள் விற்பது குறித்து தர்க்கத்தில் ஈடுபட் டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து அந்த முல்லா பார்குண்டா குர்ஆனை எரித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு திரண்டிருந்த கும்பல் பெண் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஆப்கானியர் கடந்த திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 28 வயது பார்குண்டா தடிகளால் கடுமையாக தாக்கப்பட்டும் வாகனத்தை மேலேற்றியும் கொல்லப்பட் டிருக்கிறார். அவரது உடல் கார் வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டு தீமூட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொலிஸ் அதிகாரி ஏ.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிடும்போது, பார்குண்டா உள்ளுர் முல்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். புனித சன்னதியில் முல்லாக்களிடம் தாயத் துகளை வாங்க பெண்கள் வீணாக பணம் செலவு செய்வதாக பார்குண்டா தனது தந்தையிடமும் குறைப்பட்டுள்ளார். 'முல்லாவின் பொய்யை நம்பி அங்கிருந்தவர்கள் முஸ்லிமல்ல என்று தீர்மானித்து அவரை தாக்க தொடங்கினார்கள்" என்று அங்கிருந்த பொலிஸ் அதிகாரி முஹமது நதீர் குறிப்பிட்டார்.

இதன்போது பார்குண்டா தான் குர்ஆனை கொளுத்தவில்லை என்று அந்த கும்பலிடம் மறுப்பு தெரிவித்தார் என்று மற்றொரு பொலிஸ் அதிகாரியான செய்யிது ஹபித் குறிப்பிட்டார். 'நான் ஒரு முஸ்லிம். முஸ்லிம் ஒருவர் குர்ஆனை எரிப்பதில்லை" என்று அவர் அந்த கும்பலிடம் கூறிக்கொண்டி ருந்தார். எனினும் அங்கு கூடியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க பொலிஸார் அவர்களை அகற்ற முயன்றனர். எனினும் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக அந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணை யிலும் அந்தப் பெண் குர்ஆனை எரித்ததற்கான ஆதாரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பில் இதுவரை 18 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதோடு மேலும் பலர் கைதாவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. தாக்குதலை தடுக்கத் தவறிய 13 பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். காபுலின் 'hஹ்டு 'ம்i'ரியா பள்ளிவாசல் மற்றும் சன்னதிக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2 comments:

  1. May Allah Reward this woman Jannathul Firdous for trying establish Islam... in its pure form.

    This kind of people are still found in our own country and many villages.. For them Quran and Saheeh Sunnah of Rasoolullah is nothing infront of their village and old customs which are BIDA (not in Islam way) such as KATTHAM, MEELAD VILA, MAWLEED, KANDIREE, AWLIYA SIYAARAM and many more.

    May Allah accept her shaheed and reward her Jannah.

    ReplyDelete

Powered by Blogger.