Header Ads



நிமலுக்கு தார்மீக உரிமை இல்லை - எதிர்க்கட்சி தலைவராக தினேஷை நியமிக்க கோரிக்கை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால்  நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா, எதிர்க்கட்சி தலைவராக தொடர்ந்து இருப்பதில்   எவ்விதமான தார்மீகமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆகையால், எதிர்க்கட்சி தலைவராக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவை நியமிக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் பங்காளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவிதுரு ஹெல உறுமயவில் செயலாளர் உதயன் கம்பன்பில ஆகியோர் இணைந்து கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்கண்டவாறு   தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு  வலியுறுத்தும் கூட்டம் இரத்தினபுரியில் எதிர்வரும் 26ஆம் நடைபெறும் என்றும்   பங்காளிகள் கட்சிகள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.