Header Ads



வெலே சுதாவின் சகா 20 மில்லியன் ஜீப், 28 இலட்சம் ரூபா காருடன் கைது

-எம். எஸ். பாஹிம்-

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் இலங்கை முகவராக செயற்பட்ட சுராஸ் அஹ்மட் என்பவர் ஹபரண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து வெலே சுதா பயன்படுத்திய 20 மில். ரூபா பெறுமதியான ஜீப் ஒன்றும் 28 இலட்சம் ரூபா பெறுமதியான காரொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர், வெலே சுதாவின் வங்கிக் கணக்குகளை நிர்வகித்து வந்ததோடு அவருடைய சொத்துக்களையும் பாதுகாத்து வந்துள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

வெலே சுதாவின் இலங்கை முகவர்கள் தொடர்பாக பல்வேறு மட்டங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. வெலே சுதா பாகிஸ்தானிலிருந்து அனுப்பும் போதைப் பொருட்களை இலங்கையிலிருந்து சுராஸ் அஹ்மட் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார்.

இவர் குறித்து தகவல் கிடைத்து சி.ஐ.டி. பின்தொடர்வது தெரியவந்ததும் சந்தேகநபர் ஹபரன பகுதி வயல் வாடியொன்றில் மறைந்திருந்துள்ளார் சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவராகும். இவர் பயன்படுத்திய காரும் வெலே சுதாவின் ஜீப் வண்டியும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

வெலே சுதாவின் வாக்கு மூலத்தின் பிரகாரம் கிடைத்த தகவல்களின் பிரகாரமே தற்பொழுது விசாரணைகள் முன் னெடுக்கப்படுகிறது. இது வரை 160 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏனைய வழிகளில் கிடைக்கும் தகவல்கள் தொடர்பில் அடுத்த கட்டத்தின் போது விசாரணை நடத்தப்படும். வெலே சுதாவுடன் தொடர்புள்ள அரசியல் வாதிகள் குறித்த விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.