Header Ads



மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பிக்க, சட்டத்தரணிகள் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை ஹெல்பிங் ஹேன்ட் வழக்குத் தீர்ப்பு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஹம்பாந்தோட்டை ஹெல்பிங் ஹேன்ட் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த காலத்தில் பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸ இந்த திட்டத்தின் ஊடாக பாரியளவு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைகளை அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கொண்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைகளின் போது தாம் பிழையான தீர்ப்பினை வழங்கியதாகவும் அதற்காக வருந்துதாகவும் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டமொன்றின் போது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையான அளவில் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இந்த வழக்கு விசாரணை குறித்த தீர்ப்பு மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டில் அப்போதைய பிரதமருக்கு எதிராக வழக்கு விசாரணைகளில் அவரை விடுவித்தமைக்காக வருந்துவதாக முன்னாள் பிரதம நீதியரசர் பகிரங்கமாக தெரிவித்தன் மூலம் அவர் தவறிழைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது என அவர் சந்திரபால குமாரகே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தீர்ப்பு தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய எவ்வித சட்டத் தடையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சிக்கு எதிரான கொலை வழக்கு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு ஆகியன தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.