Header Ads



மற்றுமொரு ஜமாத்தே இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை

பங்களாதேசின் பிரதான இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமியின் மற்றுமொரு முன்னணி தலைவருக்கு 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடனான சுதந் திர போராட்டத்தின்போது யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த யுத்த குற்றங்கள் குறித்து விசாரிக்க கடந்த 2010ம் ஆண்டு அமைக்க ப்பட்ட விசேட நீதிமன்றத்தால் குற்றங்காணப்படும் ஒன்பதாவது ஜமாத்தே இஸ்லாமிய தலைவராக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 79 வயது அப்துஸ் சுபா இடம்பிடித்துள்ளார்.

வடக்கு பங்களாதே'pல் சுமார் 400 கிராமமக்களை கொன்றதாகவே அவர் மீது குற்றங்காணப்பட்டுள்ளது.எனினும்  யுத்த குற்றம் தொடர்பில் விசாரிக்கும் நீதிமன்றம் சர்வதேச தரத்தில் இல்லை என்று மனித உரிமைக் குழுக்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்த நீதிமன்றத்திற்கு உள்நாட் டில் ஆதரவு இருந்தபோதும் தமது தலைவர்களை இல்லாதொழுக்கும் அரசியல் நோக்கத்துடன் இந்த நீதி மன்றம் செயற்படுவதாக ஜமாத்தே இஸ்லாமி ஆதரவாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மற்றும் 10 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாகிஸ்தானுடனான யுத்தத்திற்கு பின்னர் பங்களாதேஷ் சுதந்திரம் பெற் றது.

இதில் பாகிஸ்தான் படையுடன் கூட்டுச் சேர்ந்து கிழக்கு பாகிஸ் தான் பிரிவதை தடுக்க முயற்சித்தவர்களுக்கு எதிராகவே பங்களாதேஷ் இந்த யுத்த குற்ற நீதிமன்றத்தை அமைத்தது. ஜமாத்தே இஸ்லாமி தலைவர்களில் ஒருவரான அப்துல் காதர் முல்லாஹ் கடந்த 2013 டிசம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டார்.

2 comments:

  1. Need to kill first kafir hasna mujiburrahman

    ReplyDelete
  2. ஹஸீனாவைக் கொல்வதெல்லாம் இருக்கட்டும் உமர் ஹம்ஸா, மேற்படி ஜமாத்தே-இஸ்லாமி தலைவர் 400 கிராம மக்களை கொன்றொழித்தது பரவாயில்லையா உன்கிறீர்களா...?

    ReplyDelete

Powered by Blogger.