Header Ads



நல்லாட்சியில் இலாபம் என்ன என்பதை, இந்த அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது - அமீர் அலி

-அனா-

தமிழ் பேசுகின்ற விசேடமாக தமிழர்களின் குரல்வளையை நசுக்கவேண்டும் என்று முன்னைய காலங்களில் உரத்துக்கூறிய கட்சிகள், சிங்கள மேலாதிக்கத்தினை மேம்படுத்த வேண்டும் என்று கூறிய கட்சிகள் தற்போமைய மைத்திபால அரசாங்கத்திலே தமிழர்களின் பிரச்சினைகள் நியாயபூர்வமாக தீர்க்கப்படவேண்டும் என்று குரல் எழுப்புகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றம் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று (02.02.2015) காலை நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை சமூகம் என்ற ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து இந்த நாட்டில் நடக்குமா நடக்காதா என்று இருந்த ஒரு விடயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது அதன் அடிப்படையில் இன்று நடந்துள்ள மாற்றம் இனத்துவேசத்தினை கக்கிய ஹெலஉறுமய, ஜே.வி.பி போன்ற கட்சிகள் தமிழர்களுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று பேசுகின்ற அளவுக்கு இன்று நிலைமை வந்துள்ளது.

வடக்கின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களை சற்று அதிகளவாக வழங்கவேண்டும் என்று ஹெலஉறுமய கூறும் அளவுக்கு நிலைமை இன்று மாறியிருக்கின்றது.

கடந்த காலத்தில் இந்த நாட்டில் நல்லாட்சி வேண்டும் என்று அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர் இந்த நாட்டின் ஒரு தனிமனிதாராக இருந்த முன்னாள் ஜனாதிபதிக்கு வருடாந்தம் 10ஆயிரம் கோடி ரூபா எங்களது பணம் செலவுசெய்யப்பட்டுள்ளது ஆனால் இன்று வந்துள்ள ஜனாதிபதி வருடாந்த மொத்த செலவு 250 கோடி ரூபா மட்டுமே செலவுக்காக ஒதுக்கீடுசெய்து நல்லாட்சிக்கான வெளிப்பாட்டினை காட்டியுள்ளார்.

நல்லாட்சியில் மக்கள் பெற்றுக்கொள்ளும் இலாபம் என்ன என்பதை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக கால்கோல் இட்டவர்கள் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் என்பதில் அனைவரும் பெருமைகொள்வர் மாற்றம் என்றால் இதுதான் மாற்றம்.

சிலர் எதிர்பார்த்தார்கள் மாவட்டத்தில் தோல்வி அடைந்தால் தேசியத்தில் வெற்றிபெறலாம் என்று அவ்வாறான தப்புக்கணக்கு போட்டவர்களும் எம்மிடத்தில் உள்ளன. நாங்கள் போடுகின்ற கணக்கு தப்பாது என்பது எமக்கு தெரியும்.

சமூக மயப்படுபடுத்தப்பட்ட சிறுபான்மை சமூகத்தினுடைய பேச்சையும் மூச்சையும் பார்வையினையும் கொண்ட கணக்கு என்பதினால் அதுவெல்லும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது.தற்போது வெற்றிபெற்றுள்ளது.

தமிழ் பேசுகின்ற விசேடமாக தமிழர்களின் குரல்வளையை நசுக்கவேண்டும் என்று முன்னைய காலங்களில் உரத்துக்கூறிய கட்சிகள், சிங்கள மேலாதிக்கத்தினை மேம்படுத்தவேண்டும் என்று கூறிய கட்சிகள் தற்போமைய மைத்திபால அரசாங்கத்திலே தமிழர்களின் பிரச்சினைகள் நியாயபூர்வமாக தீர்க்கப்படவேண்டும் என்று குரல் எழுப்புகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால் அதுதான் அரசியல் ரீதியான மாற்றத்துக்கு நீங்கள் வழங்கிய ஆணைக்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம் ஆகும்.

மோட்டார் சைக்கிள்கள் கிடைக்காமல்போகலாம், ஏனைய வசதி வாய்ப்புகள் கிடைக்காமல்போகலாம் பாலம் கட்டக்கிடைக்கும் கிடைக்காமல்போகலாம் ஆனால் இவ்வாறான பாரிய மாற்றத்திற்கு வித்திட்ட உங்களைப்போன்றவர்கள் உங்களுக்கு பின்நிற்கின்றவர்கள் எதிர்காலத்தில் செய்ய இருக்கின்ற சாதனைகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.


No comments

Powered by Blogger.