Header Ads



இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் ''அசிங்கம்''


ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கும் நோக்கில், 3 பேரின் மரபணுக்களைச் சேர்த்து குழந்தை பிறக்கும் விதமாக செயற்கை  கரூவூட்டல் முறையை அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு  நடைபெறவுள்ளது. குழந்தைபேறு இல்லாதவர்கள் கரு முட்டைகளை தானமாக பெற்றோ, வாடகை தாய் மூலமாகவோ செயற்கை கருவூட்டல்  (ஐ.வி.எப்) முறை யில் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். கருவில் குழந்தை உருவாகும்போது எம்.டி.என்.ஏ என்ற மரபுப் பொருள் தாயிடமிருந்து  செல்லும். இதுதான் உடல் செல்களுக்கு சக்தியை கொடுக்கும். பார்வை குறைபாடு, சர்க்கரை நோய், தசை சிதைவு உட்பட பல பாரம்பரிய மரபு  நோய்களுக்கும் இதன் மூலமாகத்தான் ஏற்படுகிறது. 

இதைத் தடுப்பதற்காக செயற்கை கரூவூட்டலில் குழந்தையை உருவாக்கும்போது, தாய் மற்றும் தந்தையின் டி.என்.ஏவுடன், தானம் அளிக்கும்  பெண்ணின் ஆரோக்கிய மான எம்.டி.என்.ஏவை சிறிதளவு சேர்க்கலாம் என செயற்கை கருவூட்டல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி 3 பேரின் மரபணுக்கள் சேர்ந்தால், ஒரு குழந்தைக்கு 3 பேர் பெற்றோர்களாகிவிடுவர். இதற்கு மத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 3  பேரின் மரபணுக்களுடன் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடிவு செய்தால் செயற்கை கருவூட்டல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர  வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 90 நிமிடங்கள்  விவாதம் நடைபெறும். அதன்பின் எம்.பி.க்கள் கட்சி சார்பில்லாமல் தங்கள் மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டத் திருத்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்து விட்டால், செயற்கை கரூவூட்டல் முறையில் 3 பெற்றோரின்  குழந்தையை உருவாக்கும் முதல் நாடு இங்கிலாந்துக்கு என்ற பெயர் கிடைக்கும். 2வது பெண்ணின் மரபணுவை சேர்த்து கருவை உருவாக்கினால்,  இங்கிலாந்தில் சுமார் 2,500 பெண்கள் மரபணு நோய் பிரச்னையிலிருந்து தப்புவர் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்னர். டிசைனர்  குழந்தைகள்: ரத்த தானம் போன்றுதான் இந்த மரபணுதானம் என்கிறார் செயற்கை கருவூட்டல் நிபுணர் ராபர்ட் வின்ஸ்டன். ஆரோக்கியமான  குழந்தைகள் பிறக்க இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இங்கிலாந்து எம்.பி.க்களு க்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள்  வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளன. ஆனால், 3 பெற்றோரின் குழந்தைகளை உருவாக்க இங்கிலாந்து தேவாலயம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  ‘டிசைனர்’ குழந்தைகள் பிறப்பதற்கு வழிவகுக்கும் முதல் முயற்சி இது என எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.