Header Ads



முதலமைச்சர் தொடர்பில் திருட்டுத்தனமாக, கையொப்பம் இடுமாறு கூறப்பட்டது - சுபைர்


திருட்டுத்தனமாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தெரிவு தொடர்பில் பொதுஜன ஜக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருடன் கலந்துரையாடியுள்ள  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த விடயம் தொடர்பில் எமது கட்சியின்  தேசிய தலைவருடனும் . கிழக்கு மாகாண உறுப்பினர்களுடனோ எவ்வித கருத்துப்பரிமாறல்களையும் செய்யவில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும். கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர்.முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தெரிவு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும். கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்திய அரசாங்கத்தில் எமது கட்சி பங்காளியாகவுள்ளது.அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸசும் அதேஆட்சியில் இருக்கின்றது.அதே போல் கிழக்கு  மாகாண சபையிலும் இரு கட்சிகளும் மிகவும்  நெருக்கமாக இருந்து செயற்பட்டுவருகின்ற நிலையில்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எமது தேசிய தலைவர் றிசாத் பதீயுதீனுடன் எவ்வித பேச்சு வார்த்தைகளையும் நடத்தாது எமது கட்சி மாகாண சபை உறுப்பினர்களை வரவழைத்து கையொப்பமிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை  கோறியது.

கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருந்துவந்துள்ளது. அந்த முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் உள்ளிட்ட நாங்கள் ஆர்வமாக இருந்துவந்துள்ளோம். ஆனால் இந்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் திருட்டுத்தனமாக எவருக்கும் அறிவிக்கப்படாமல் பெயர் குறிப்பிட்டு அவருக்கு ஆதரவாக எமது கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் இணக்கப்பாட்டுடன் தான் இந்த முதலமைச்சர் தெரிவு செய்யப்படுகின்றார் என்று கூறி எம்மை அழைத்து கையொப்பம் இடுமாறு கூறப்பட்டது.

ஆனால் இது தொடர்பில் எமது தலைவருக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்ட நான் இவ்வாறான பிழையான அனுகு முறை தொடர்பில் எனது அதிருப்தியினை வெளியிட்டதுடன் தலைமைத்துவத்தின் அனுமதியின்றி கையொப்பம் இட முடியாது என்பதை தெரிவித்ததுடன், எமது   கட்சியின் தலைவருக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளேன் என்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.

அதே வேளை கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வகிப்பகம் என்பது மிகவும் அத்தியவசிமானது என்றும் எம்.எஸ்.எம்.சுபைர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. One of the main culprit fox busy drafting a lengthy thesis full of rubbish reasoning out that CM selection ok he coming out later.

    He is caught pants down .

    ReplyDelete
  2. Why our Muslim brothers make so trouble each others. Other community laugh on Muslims. Please make unity in Muslim politicians. Ohhhhh Yaaa Allah give understand to Our Muslim politicians.

    ReplyDelete

Powered by Blogger.