Header Ads



ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை எரிப்பது தொடர்பில், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் முறுகல்

(எம்.ஏ.றமீஸ்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால்  மட்டக்களப்பு மாவட்டத்தின் மாகாண சபை உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமதிற்கு அப்பதவியினை வழங்குவதென அறிவிக்கப்பட்டதையடுத்து அம்பாறை மாவட்டமும் சாய்ந்தமருதுப் பிரதேசமும் தொடர்ச்சியாக மு.கா தலைவரால் ஏமாற்றப்பட்டு வருகின்றதென வலியுறுத்தி இன்று(06) சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு மு.கா தலைவரின் கொடும்பாவியினை ஏந்தியவாறு பல்வேறுபட்ட கோசங்களை எழுப்பினர். அக்கொடும்பாவிக்கு பாதணிகளால் சாரமாரியாக  மக்கள் தாக்கியதையடுத்து பிரதான வீதியின் நடுவில் அக்கொடும்பாவியினை எரிக்க முற்பட்டனர்.

இதன்போது கொடும்பாவியினை எரிப்பது தொடர்பில் கல்முனை பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. ஈற்றில் அக்கொடும்பாவி ஜீப் வண்டியில் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து சறிது நேரம் சாய்ந்தமருதுப் பிரதேசம் பதற்றத்துடன் காணப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதேவேளை நேற்றைய தினம் இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததை அறிந்த பொலிஸார் வீதியோரங்களில் விஷேட பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


5 comments:

  1. பிரதேச வாதத்தின் உச்சக் கட்டம். மிகவும் கேவலமாக ஆட்டம் போடுகிறது. திரு. ஜமீல் அவர்கள் இதற்கு முழு பொறுப்பு கூர வேண்டும். முஸ்லிம் சமூகத்துக்கெ பெரும் அவமானம். திரு. ஜெமீல் அவர்கள் தனது தலையில் அவரே மண்ணை வாரி கொட்டுவதற்கு சமம்.
    இந்த கூத்துக்கெல்லாம் தலைமை ஒரு சரியான முடிவு கட்டும் என எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. nalla முறைகள் பேசு தீர்த்து கொள்ளாமல் ஒரு குடிகாரன் போல செயற்படுஹிரார்கள் எல்லோரும் பதவி ஆசை பண ஆசைலும் பாடு படுஹிரார்கள் நீங்கள் எல்லோரும் சஜித் பிரமாதாசவ பார்த்து படிங்க அவர் முஸ்லிமாக நடக்கிறார் அனா முஸ்லிம் இல்ல முஸ்லிம் மாக்காலாக நடக்கிறார்கள் ஆனால் முஸ்லிம்

    ReplyDelete
  3. எந்த மசிருக்கும் பயப்பட மாட்டான் அம்பாரையான் அவனுகளையுமு் ஜெமீலையும் எந்த கொம்பனாலையும் ஆட்ட முடடியாது

    ReplyDelete
  4. We have to remember what our beloved leader marhoom Ashraff was told. That is to obey leaders decisions. it is very unfortunate situation due to desire for positions.

    ReplyDelete
  5. thuu manamketta makkalum katchiyum... tamilanin mu.... ungalukku paruke vendum

    ReplyDelete

Powered by Blogger.