Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி, போராட்டம் நடத்த நேரிடும் - அமைச்சர் குணவர்தன

மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டால் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இந்த அநீதி அழுத்தங்கள் காரணமாகவே நான் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்ப்பை வெளியிட்டு வெளியே வந்தேன்.

இளைஞர்கள் அரச ஊழியர்கள் புத்திஜீவிகள் மூன்று வேளை உண்ண உணவில்லாதவர்கள் நாட்டில் கோரிய மாற்றத்திற்கு பங்களிப்பு வழங்கினோம். ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுகின்றேன். இன்று சிலர் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

எனினும் அந்தக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இவர்களை ஐந்து சதத்திற்கேனும் மதிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்திய போது நாம் நாட்டுக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் ஆயுத பலத்தினால் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டது. நாம் அந்த அனைத்து திட்டங்களையும் முறியடித்தோம் ஆயுத பலத்தை மக்கள் பலத்தினால் தோற்கடிக்கச் செய்தோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.