Header Ads



சரத் என் சில்வா சட்டவிரோதமாக, மரம் வெட்டியதாக குற்றச்சாட்டு

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட சிலர் - வடக்கு கட்டான - கங்காராம தியான மத்திய நிலைய வளாகத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அந்த மத்திய நிலையத்தின் பொறுப்பாளரான கொஸ்கொட சமதசீலி தேரர் hfm  செய்திச் சேவைக்கு இந்த தகவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக HFM செய்திச் சேவை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், குறித்த காணி தமக்கு சொந்தமானது என தெரிவித்தார்.

சட்டவிரோதமாக தாம் மரங்களை வெட்டவில்லை எனவும், அனாவசியமான தாவரங்களையே அகற்றியதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 100 வருடங்களுக்கு முன்னர் தமது மூதாதையர் குறித்த காணிக்கு உரிமையாளர்களாக இருந்ததாகவும், அந்த காணியின் ஒரு பகுதி விகாரைக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.