Header Ads



கோத்தபாய ராஜபக்ச, நாட்டைவிட்டு வெளியேறவில்லை - த ஐலன்ட் நாளிதழ்


இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறவில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே இன்னமும் தங்கியிருப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும்  ஆங்கில நாளிதழ் த ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.  

ஜனாதிபதி  தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து, கோத்தபாய ராஜபக்ச தனது மனைவியுடன் மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், அவர், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், இன்னமும்  இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே தங்கியுள்ளார் என்றும், த ஐலன்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி  தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவதை உணர்ந்ததும், கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலேயே தனது அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் இருந்து வெளியேறியிருந்தார்.

ஆனால், கோத்தபாய ராஜபக்ச இன்னமும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேறவில்லை.

கோத்தபாய ராஜபக்ச வகித்து வந்த பாதுகாப்புச் செயலர் பதவிக்கு நேற்று, பஸ்நாயக்க என்று மூத்த சிவில் சேவை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், கோத்தபாய ராஜபக்ச தனது வதிவிடத்தை விட்டு வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தோல்வியுற்ற போது அதிகம் அதிர்ச்சியடைந்தவர் கோத்தபாய ராஜபக்சவே என்றும், அவரே இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்று மகிந்தவுக்கு ஆலோசனை கூறியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சுமுகமாக அதிகாரத்தைக் கைமாற்ற இணக்கம் ஏற்பட்டதும், கோத்தபாய ராஜபக்ச யாருடனும், பேசவில்லை என்றும், அமைதியாகவும் அதிர்ச்சியோடும் காணப்பட்டதாகவும், கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. சிங்கம் சிறைக்குப் போகும் நிலை வந்து விட்டது உன்னைப்போல் எத்தனையோ சிங்கம் புலி எல்லாம் இந்த சமூதாயம் இது கடைசியில் சிங்கமும் புலியும் பூனையாகி எலியாகி நாசமாபோய் விட்டது உன் கூலிப்படை பொது பன சேனாவால் ஷஹிதாக்கப்பட்ட எம்சகோதரர்கள் இப்போ இன்ஷா அல்லாஹ் இந்த உலகத்தை விட பல மடங்கு விசாலமான சொர்க்கத்தில் இருப்பாரகள்

    ReplyDelete

Powered by Blogger.