Header Ads



கிழக்கு மாகாண சபையில் ஐ.தே.க. க்கு அமைச்சு பதவி, தமிழ்த் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவை - ஹக்கீம்


கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் 30-01-2015 இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவை. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.