Header Ads



மஹிந்தவுக்கு மைத்திரி கொடுக்கும் நெத்தியடி சுதந்திரக் கட்சி தலைவர் பதவிக்கு மைத்திரி!

-நஜீப் பின் கபூர்-

மைத்திரி இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் எந்தெந்த மாவட்டங்களில் வெற்றி பெறுவார், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதனை மிகத் துல்லியமாக நமது இணையத்தளத்தில் நாம் கடந்த 04.01.2015 திகதி பதிவு செய்திருந்தோம். நமது நாட்டில் எந்தவொரு சிங்கள ஆங்கில ஊடகங்களே இப்படி மிகச் சரியான கணக்கைச் சொல்லி இருக்கவில்லை. 

நமது வாசகர்கள் நாம் குறிப்பிட்ட தினத்தில் பதிவேற்றி இருந்த செய்தியை வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கலாம். அந்தச் செய்திகள் அப்படி இருக்க, இலங்கை அரசியலில் மிகப் பிந்திய பரபரப்பான செய்திகளைத் தற்போது நாம் நமது வாசகர்களுக்கு இப்போது அறியத்தருகின்றோம்.

நேற்று வரை மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கு உழைத்த பெரும் சுதந்திரக் கட்சித் தலைவர்கள்- அமைச்சர்கள் இன்று மைத்திரி பக்கம் தாவி மஹிந்தவுக்கு நெத்தியடி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மஹிந்த சுதந்திரக் கட்சியின் தலைவர் அல்ல, மைத்திரியே எமது சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றும் பகிரங்கமாக இப்போது அறிவித்திருப்பதுடன், மஹிந்த கதை முடிந்தது என்றும் அங்கு கூறி இருக்கின்றார்கள். இப்படிக் கூறுகின்றவர்களின் பட்டியலை இப்போது உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.

அமைச்சர்களான ஜனக பண்டார தென்னகோன் -மாத்தளை, நாவின்ன -குருனாகல, விஜேமுனி செய்சா மொனராகல, அமுனுகம - கண்டி, பியசேன கமகே -மொனராகல,, பீலிக்ஸ் பெரேரா-கம்பஹ, ரெஜினோல்ட் குரே-களுத்தறை, ஜகத் புஸ்பகுமார, கமகே,-மொனராகல, அதாவுட செனவிரத்தன-கேகாலை, தயாசிரி ஜயசேக்கர முதலமைச்சர் வட மேல் மாகாண சபை, என்போர் இவர்களில் முக்கியமானவர்கள்.

இன்று நடந்த கூட்டத்தில் சுதந்திரக் கட்சித் தலைவர் பதவிக்கு மைத்திரிபால சிரிசேன, செயலாளர் துமிந்த திசாநாயக்க ,பொருலாளர் நாவின்ன, ஆகியோர் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றார்கள்.

இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஷவும் கட்சிக் கூட்டமொன்றை ஏட்டிக்குப் போட்டியாக இன்று கொழும்பில் நடாத்தி இருக்கின்றார். அங்கு கூச்சலும் குழப்பமும் நடந்திருக்கின்றது என்று தெரிகின்றது.

1 comment:

Powered by Blogger.