Header Ads



அன்வர் இஸ்மாயீல் வைத்தியசாலையில் வயிற்று வலியால் சிறுவன் மரணம் - குடற்புழுக்கள் மீட்பு

வயிற்றுவலி காரணமாக  திங்கட்கிழமை சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஒருவரின் வயிற்றிலிருந்து பெருந் தொகையான குடற்புழுக்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான மஹாநாம திஸாநாயக்க தலைமையிலான வைத்தியர் குழு மேற்கொண்ட சத்திர சிகிச்சையின் பின்னரே இந்த நாடாப்புழுக்கள் வயிற்றுக்குள்ளிருந்து அகற்றப்பட்டன.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி பல சாதனைகளை நிகழ்த்திய வைத்திய நிபுணர் ஏ.எச்.சமீம் சிங்கபூர் பல்கலைக் கழகத்துக்கு விசேட சத்திர சிகிச்சை தொடர்பான உயர் கல்வியினை பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்தார். அடுத்து புதிய சத்திர சிகிச்சை நிபுணராக வைத்திய கலாநிதி மஹாநாம திஸாநாயக்க சேவையாற்றுகிறார்.

இந்த வைத்தியசாலையில் குறைந்தளவான வளங்களைக் கொண்ட போதிலும் பாரிய அளவிலான சேவைகளை இந்த வைத்திய நிபுணர்கள் ஆற்றி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.