Header Ads



பைல்களுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது - அமைச்சர் ரெஜினோல்ட் குரே

பைல்களுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது என ஆளும் கட்சியின் சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.   

அரசாங்கத்திலிருந்து  வெளியேறியவர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் உள்ளவர்களினதும் பைல்கள் உள்ளதாகவும் இப்போது அந்த பைல்களை வெளிப்படுத்தினால் அரசாங்கம். தவறிழைத்ததாக மாறிவிடும்.   பைல்கள் தொடர்பில் கதைப்பதில் வேலையில்லை. உள்ளே உள்ளவர்களது பைல்கள் உள்ளன. வெளியே உள்ளவர்களது பைல்களும் உள்ளன. ஆனால் பைல்களுக்கு பயந்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.  

அப்படி இல்லாவிட்டால் பைல்களை உருவாக்கி தமக்கு அருகில் வைத்துகொள்ள வேண்டும். கடந்த அரசாங்கத்திலும் பைல்கள் இருந்தது. இந்த அரசாங்கத்திலும் பைல்கள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

தற்போது பைல்களை வெளிப்படுத்தினால் இவ்வளவு காலமாக பைல்களை வெளிபடுத்தாமல் மறைத்து வைத்திருந்த தவறிழைத்ததாக அரசாங்கம் மாறிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ஆளும் அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றவர்கள் பற்றி கோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில்  எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

5 comments:

  1. அரசாங்கத்துக்கு
    உள்ளே உள்ளவனுக்கு
    ஒரு சட்டம்
    வெளியே உள்ளவனுக்கு
    ஒரு சட்டம்
    அதுதான்
    மகிந்த சாம்ராஜ்யம்.

    ReplyDelete
  2. A good reply and matter to considered seriously for Keeping the File Holders inside all these days. That means This government is made of File Holders, So public can ask JUSTICE authority to start investigating "Hiding those" till today.

    ReplyDelete
  3. சபாஷ்! இப்போதுதான் ஆளும்கட்சியிலுள்ளவர்களுக்கு தங்கள் முதுகெலும்புகள் இருப்பது லேசாக தெரிய வந்திருக்கின்றது போலும்!

    ReplyDelete
  4. I want to say some words for whoever sitting Mahinda's side..... Be careful one day Mahinda will be thrown out the same word for whoever living with his selfish paradise. we know as well Mahinda who threat and intimidate in the same way whoever sitting his side they and have no back bone for all. that only what we can say....

    ReplyDelete
  5. all are most wanted in parliament

    ReplyDelete

Powered by Blogger.