Header Ads



இது சூடான காலகட்டம் - ரவூப் ஹக்கீம்


எந்த முடிவை மேற்கொண்டாலும், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால் அதில்தான் சமூகத்திற்கு நிம்மதியும், விமோசனமும் இருக்கும் என்று குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்  இருக்குமிடத்தில் இருந்தாலும் சரி, வேறெங்கும் போவதென்றாலும் சரி சேதாரம் குறைவானதாக அது நடைபெற வேண்டும் என்றார். 

ஜனாதிபதித் தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஹக்கீம் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் பொழுதே இதனைக் கூறினார். 

ஓலிபரப்பாளர் எஸ். ஜனூஸ் எழுதிய 'குரலாகி' கவிதை ஒளி இறுவட்டு வெளியீட்டு விழா,  கொழும்பு 10 தபால் தலைமை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பொழுது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆற்றிய உரையிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.  அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன, 

இது ஒரு வித்தியாசமானதும், மிகவும் சூடானதுமான காலகட்டமாகும். இந்த கூட்டத்தில் அரசியல் பேசாமல் இலக்கியத்தை மட்டும் கதைத்து விட்டு சென்றுவிடுவேனோ என்று பலர் கவலைப்படக் கூடும்.   

அந்த வகையில் அரசியலையும் பேசியாக வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிக்கு வந்துள்ள குதூகலத்தைப் பார்க்கின்ற பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. சென்ற கிழமை ஏங்கிப் போய், ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த ஒரு சாராருக்கு இன்று ஏற்பட்டுள்ள குதூகலத்தைப் பார்த்தால் இது எவ்வாறான அரசியலென எண்ணத் தோன்றுகிறது. உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கின்றது. இருக்கின்றோமோ என்ற விவஸ்தையே இல்லாமல் இருந்தவர்கள், போய் விடுவார்களோ என்ற பதட்டத்தை பார்க்கும் பொழுது அதிலுள்ள குதூகலம் சொல்லி மாளாது. இந்த குதூகலம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

என்றாலும் இது வித்தியாசமான காலம். ஆனால் எதில் வெற்றியிருக்கின்றது என்று பார்த்தால், எங்கிருந்தாலும் சரி, இருக்குமிடத்தில் இருந்தாலும் சரி, வேறெங்கும் போவதென்றாலும் சரி சேதாரம் குறைவானதாக அது நடைபெற வேண்டும். இதில் உள்ள சவால் தான் தாரக மந்திரம். எனவே, அதைப் பற்றித்தான் நாங்கள் எல்லோரும் இப்பொழுது சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். 

களநிலவரத்தை நாங்கள் சரியாக புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இதைவிட கூடுதலாகப் பேசுவது ஆரோக்கியமானதல்ல. 

இன்று எங்களது கட்சி முக்கியஸ்தர்கள் பலருடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். ஜாதிக ஹெல உருமயவிடம் இருந்து நாங்கள் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். அவர்கள் எந்த முடிவை எடுத்த போதிலும், மேற்கொண்ட முடிவில் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றேன். 

எந்த முடிவாக இருந்தாலும் சரி, எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால் அதில்தான் சமூகத்திற்கு நிம்மதியும், விமோசனமும் இருக்கும்.  இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் கூறினார். 

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அமைச்சர் 
ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடக ஆலோசகர்  

8 comments:

  1. ஒட்டுமொத்த பலயீனத்தையும் தனகென்று ஒரு அரசியல் கொள்கையும் அற்ற நபருடைய பேச்சாகவே உள்ளது. வழி தெரிய விட்டால் தெரிந்தவர்கள் நிறையவே உண்டு, தயவு செய்து ஓய்வெடுத்துக் கொண்டு அவர்களுக்கு வழி விடுங்கள்.

    விருப்பம் இல்லாத கல்யாணத்துக்கு பெண்ணிடம் சம்மதம் கேட்டால் இப்படித்தான் பதில் கிடைக்கும். அன்பை சொரிந்து வளர்த்த பெற்றோர் சங்கடப்படுவது போல் காங்கிரஸ் போராளிகள் மிகவும் குழப்பத்தில் உள்ளார்கள்.

    ஆனால் செத்தாலும் பரவாயில்லை ராஜபக்ச அன் கோ வுக்கு ஒரு பாடம் படிப்பித்தே ஆக வேண்டும் என்று முஸ்லிம்கள் ஒரு முடிவுடன் உள்ளார்கள்.

    முஸ்லிம் இளைஞ்சர்களே ஜனவரி 8 ஆம் திகதி வீடு வீடாக சென்று அனைத்து முஸ்லிம்களும் வாக்கு சாவடிக்கு சென்று தங்களுது வாக்கை ராஜபக்சவுக்கு எதிராக பதிவு செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. Selfish and idotic leader ever Muslim community of Sri Lanka had it's entire existence,while talking about the Islamic dress code of Muslim children,his daughters were went to Visaka Vidyalaya with mini skirt.it's time to think about a wise leader for the community.he has no back-bone to lead the Muslim community of Sri lanka.as he has done nothing for the past.coward/Rapist and the thief (Hakeem) sholud be brought to justice.

    ReplyDelete
  3. ஆதரவு அளிக்காவிட்டால் கம்பி எண்ணவரும் என்பது தலைவரோட தலையெழுத்து அதற்காக ஒரு சமூகத்தின் தலைஎழுத்தை அடமானம் வைக்கலாமா?

    ReplyDelete
  4. I totally agreed with Badusha. Holding flag with "Lahi Laha Illallah...." and voting for CASINO...." This guy is main culprit for Muslim Community and his/his parties demands and policies cause knee down entire Muslim Community. Addition to that he mentioned in a statement that there are Muslim Extremist in Sri Lanka. Time to suck these selfish and prostitute politicians.

    ReplyDelete
  5. முஸ்லிம் காங்கிரஸும் தலைவர் தொண்டர்கள் கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றை நன்றாகப்புரிந்துகொள்ளவேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாக இருந்தது, இந்த முறை அதற்கு எந்த வகையிலும் இடமில்லை காரணம் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கப்போவதில்லை. அடுத்தது எதுவித காரணத்துக்காகவும் ஆட்சியை விட்டுக்கொடுக்க இப்பயங்கரவாதிகள் தயாரில்லை, அதற்காக எவ்வளவு ஆழமாக இறங்கி பாதக செயல்களில் ஈடுபடவும் பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் தாயர் நிலையில் உள்ளார். அதை தேர்தல் நெருங்க நெருங்க கண்கொண்டு காணலாம். ஆகவே முஸ்லிம்காங்கிரஸை அரவணைத்தாலும் முஸ்லிம்களின் ஆதரவில்லாத மு, காங்கிரஸை வைத்து என்னசெய்வது என்பது ஜனாதிபதியின் உள்மனதில் உள்ள எண்ணம். ஆக எந்த வகையில் பார்த்தாலும் முஸ்லிம்காங்கிரஸிற்கு மதிப்பென்பது இக்கொடுமைவாதிகளின் ஆட்சியில் இல்லை. மாற்று வழியொன்றை பெற்றுக்கொள்ளும்வரை. ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் முதுகெலும்பில்லாதவர்கள் என்று முஸ்லிம் சமுதாயத்தால் வருணிக்கப்பட்டு வருவது சகலரும் அறிந்த உண்மை, அதை தாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம் என்பதாகவே தலைவரது கருத்து எல்லாக் காலங்களிலும் அமைந்துள்ளது.
    ஓரளவு பெளத்தமக்களும் கொடுமையாளர்களின் ஆட்சியை நிராகரிக்கத்தொடங்கிவிட்டார்கள். நாளடைவில் அது 75 ற்கும் மேற்பட்டளவைத்தாண்டும் இடத்தும் முஸ்லிம் தலவர்கள் இதே நிலையில் இருப்பார்களானால் நிச்சயம் அக்கட்சிகள் முஸ்லிம்களின் ஆதரவை இழக்க நேரிடும். ஏன் மக்கள் நேரடியாகவே ஐக்கிய தேசியக்கட்சியுடனோ மற்ற மற்ற கட்சியுடனோ இணைந்து மக்களுக்கு உதவு முடியும், அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் பேட்டியிடும் போட்டியாளர்கள் விண்ணப்பித்து தேர்தலுக்கான மெடைகள் போடும் முன்னரே இவர்களது தீர்மானம் எடுக்கப்படவேண்டும் அதன் பின்னரும் ஒன்றுமே செய்ய முடியாது. இப்படி இருக்குமிடத்து, நம் தலைவர்கள் இன்னும் பயங்கரவாதிகள் கொள்ளைக்காரர்களின் ஆட்சியை விடுவதாக இல்லை. அதற்கான காரணம் என்னவென்று அவர்களே நன்கறிந்தவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக சரித்திரம் காணாதளவு கொடுமைகள் செய்த ஆட்சி என்ற பெருமையை பெற்றபின்பும்.

    நீதி அமைச்சராக இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியாதல் நிலையில் உள்ளேன் என்று சொன்னது தனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றோம்.


    ??????

    ReplyDelete
  6. Bullshit speak leader's of muslim community. you don't know what happened for muslims in your kind mahinda's governance of regime.? You looking for your side except public. but we don't care about you and your ministers we know what to do that we will do in coming president election....

    ReplyDelete
  7. I request Jaffna Muslim to pass these comments to political prostitutes Hassan Ali and Rauf Hakeem.

    ReplyDelete
  8. ரவூப் ஹகீம் அவர்களே! இனியும் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவு கிடைக்காது .., இனியும் முஸ்லிம்கள் ஏமாறமாட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.