Header Ads



மஹிந்தவின் செய்தியுடன் வெளிநாடு சென்றுள்ள ரவூப் ஹக்கீம்..!

(நஜீப் பின் கபூர்)

(செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் கட்டுரையாளருக்கே சொந்தம்)

கடந்த 15ம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக அங்கு அறிவித்தார்.

அமைச்சர் டியூ குணசேக்கர இந்தத் தேர்தலில் ராஜபக்ஷ எதிர் நோக்கும் நெருக்கடிகள் தெர்டபாக அங்கு கருத்துத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எழுந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். இந்த நாட்களில் தன்னைப் பற்றி ஊடகங்கள் அப்பட்டமான கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றது. 

அரசை வீழ்த்துகின்ற விளையாட்டொன்றில் தான் இறங்கி இருப்பதாகவும் அரசைக் கவிழ்க்கச் சதி செய்து வருவதாகவும் ஒரு பத்திரிகையின் பெயரைக் குறிப்பிட்டு ஜனாதிபதியிடம் முறையிட்டார். தான் அரசுக்கு எதிரான கட்சிகளுடன் தற்போது பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது. இதில் எந்தவிதமான உண்மைகளுமில்லை வருகின்ற தேர்தலில் நாம் உங்களையே ஆதரிக்க இருக்கின்றோம் என்று ஹக்கீம் ஜனாதிபதியிடத்தில் உறுதி கூறி இருக்கின்றார்.

கூட்டத்தில் ஹக்கீமுக்குப் பதிலளித்த ஜனாதிபதி அந்தப் பத்திரிகை அரசை வீழ்த்துவதற்கென்றே தற்போது காரியம் பார்த்து வருகின்றது. அவற்றை எல்லாம் நீங்கள் பெரிது படுத்த வேண்டாம். அந்தப் பத்திரிகையைப் பற்றியும் எனக்குத் தெரியும் உங்களைப் பற்றியம் எனக்குத் தெரியும். கடந்த காலங்களில் நடந்த சிரிய  சிரிய  விடயங்களைப் பெரிது படுத்த வேண்டாம். 

இப்போது நாங்கள் எல்லோரும் தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் இறங்குவோம் என்று ஜனாதிபதி ஹக்கீமுக்குக் கூறினார். தற்போது நாட்டிலிருந்து வெளியேறி இருக்கின்ற ஹக்கீம் ஜனாதிபதியின் செய்தியொன்றை எடுத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் இராஜதந்தரியைச் சந்திக்கவே சென்றிருக்கின்றார் என்றும் சொல்லப்படுகின்றது.

முக்கிய குறிப்பு:

தற்போது நாம் யாரை ஆதரிப்பது என்ற முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்று ஹக்கீம் தரப்பில் செய்திகள் வெளியிடப்படுகின்றது. அப்படியானால் பலர் முன் ஜனாதிபதிக்கு கொடுத்த உறுதி மொழி போலியானதா? ஊடகத்துறையினர் பொய் சொல்கின்றார்களா? அல்லது கட்சிக்காரர்கள் தலைவர் தன்தோன்றித் தனமாக முடிவு எடுத்ததால் பிரச்சனை தோன்றும் என்பதால் இந்த பல்டியா என்று ஹக்கீம் சார்பில் செய்தி கொடுக்கின்றவரிடத்தில் நாம் கேட்கின்றோம்.

No comments

Powered by Blogger.