Header Ads



அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் - விக்டர் ஐவன்

அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என்றும், புலனாய்வுப் பிரிவினர் முற்றிப் போன பைத்தியங்கள் என்றும் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் கடுமையாக திட்டியுள்ளார். புpபிசி சிங்களசேவையான சந்தேசியவுக்கு வழங்கிய செவ்வியில் ஆக்கிரோசமான பதில்களை முன்வைத்துள்ளார்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு அண்மையில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. எனினும் இந்த கருத்தரங்கை நடத்தவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது.

புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆத்துடன் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், கருத்தரங்கில்  கலந்து கொள்பவர்கள் தாக்கப்படுவார்கள் என்றும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்து  இருந்தனர்.

தோடர்ந்து  கருத்தரங்கு நடைபெற இருந்த கொழும்பு, திம்பிரிகஸ்யாய ஜானகி விடுதிக்கும்; அநாமதேய பார்சல் ஒன்றை வீசி இனந் தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். கருத்தரங்கு நடைபெற்றால் புலிகளுக்கு ஆதரவளித்ததாக கருதி ஹோட்டலும் தாக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாற்று இடம் ஒன்றில்; கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிலையில் பிபிசி சந்தெசயவில் இடம்பெற்ற  செவ்வியில் கருத்துத் தெரிவித்துள்ள ராவய பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, தனது பைத்தியக்காரத்தனத்தை பறைசாற்றிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கூடவே புலனாய்வுப் பிரிவினர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமே அல்லாது, அப்பாவி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தக் கூடாது என்றும் விக்டர் ஐவன் குறிப்பிட்டார்.

குறிப்பாக புலனாய்வுப் பிரிவினர் அரசியல் மயப்படுத்தப்பட்டதன் காரணமாக முற்றிப் போன பைத்தியக்காரர்களாக அவர்கள் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

2005ன் இறுதிப்பகுதியில் முதலாவது தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவி ஏற்றபோது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் முரண்பாட்டைக் கொண்டிருந்த விக்றர்ஐவன் அவர் குறித்து கடுமையான விமர்சனம் அடங்கிய நூலொன்றை வெளியிட்டதுடன் மகிந்தவின் ஆருயிர் நண்பனாக உருவெடுத்தார். அத்துடன் அவரது  ஊடக ஆலோசகராகவும் செயற்பட்ட விக்டர் ஐவன்  அண்மைக்காலமாக அரசாங்கத்தையும், புலனாய்வுப் பிரிவினரையும் கடுமையாக விமர்சித்து வருவருகிறார்.

No comments

Powered by Blogger.